எம் தமிழர் செய்த படம்

August 19, 2016

சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *