சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

August 18, 2016

ஜெயமோகன்

இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின்றன. இது சுந்தர ராமசாமி அல்ல, என்னுடைய சுந்தர ராமசாமி என்று படுகிறது. இதேபோலப் பல சுந்தர ராமசாமிகள் இருக்கலாம். அவர்களும் எழுத்தில் வரக்கூடும். அது வரவேற்கத்தக்கதே. நம் காலகட்டத்து மாபெரும் ஆளுமைகளில் ஒன்று அவர். சிலைகளை உருவாக்க வேண்டாம். அவை சரியும். ஆனால் மூதாதையரை உண்டு செரித்துக் கொள்வோம். அது நம் வேருக்கு நீர்.(ஜெயமோகன் ), சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *