புத்தனின் பெயரால்

August 16, 2016

யமுனா ராஜேந்திரன்

முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்களையும் நேசத்தையும், வெறுப்பையும் துயர்களையும் புரிந்து கொள்ள முனைந்ததாகவே எனது திரைப்பயணம்ட இருந்தது. வரலாற்று நூல்களின் வழி நான் வந்து அடைந்த புரிதலை விடவும் ஆழமான புரிதலை இந்தத் திரைப்படங்கள் எனக்கு அளித்தன என்பதனை நான் நிச்சயமாகவே சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளாக நான் தேடித் தேடிப் பார்த்து வந்திருக்கிற அந்த வரலாற்றின் சாட்சியங்கள் வெறும் நினைவுகளாக அழிந்துபோய்விட விட்டுவிட எனக்குச் சம்மதமில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விளைவாக அந்த மக்கள் எதிர்கொண்ட துயர்களின் சாட்சியங்களையும் திரைப்படப் பிம்பங்களின் வழி இங்கு நான் பதிந்திருக்கிறேன். முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தில் மரணமுற்ற வெகு மக்களுக்கும் போராளிகளுக்கும் என் வரையிலான ஆத்மார்த்தமான நினைவுகூரல் இந்தப் பதிவுகள். அவர்தம் நினைவுகளின் சாட்சியமாக இது நின்று வாழும் என நம்புகிறேன். யமுனா ராஜேந்திரன்

ரூ.140/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *