மதங்களும் சில விவாதங்களும்

August 9, 2016
மதங்களும் சில விவாதங்களும்
மத நம்பிக்கைகள்  பொதுவாகவே பிறப்போடு வருகின்றன.ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள்சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில்அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’ வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே ‘பாவம்’ என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது ‘நம்பிக்கைகள்’ பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின்  மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை,வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கேஉரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *