மூடுபனிச்சாலை

August 17, 2016

சாரு நிவேதிதா

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால், சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூக சித்திரங்கள் உருவாகின்றன.

ரூ.95/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *