மூன்றாவது சிருஷ்டி

August 1, 2016
கௌதம சித்தார்த்தன்
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது. போர்ஹே வீசியெறிந்த  நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது. அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா? இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா?

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *