அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார் – டெய்லி டெலகிராஃப் நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது – கார்டியன்

தமிழ் எழுத்து ஆடை

தமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல். அறிஞர் இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.

இதயம் பேசுகிறது, குங்குமச் சிமிழ் ஆகிய இதழ்களில் தமிழ்மகன் எழுதிய குறுநாவல்களின் தொகுப்பு.

நூற்றுப் பத்து ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதைகளை எந்த விதத்திலும் உலகச் சிறுகதைகளுக்குக் குறைந்தவை அல்ல. இதன் வீச்சும் இவை தந்த அனுபவமும் மகத்தானவை. அந்த 110 ஆண்டு சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைத் தேர்வு செய்து தம் அனுபவத்தோடு அலசியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். புதிதாக சிறுகதை எழுத விரும்புவோர்க்கும் புதிதாக சிறுகதை படிக்க விரும்புவோர்க்கும் அருமையான கையேடு. கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.

டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக.... இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் ... ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.

1984 முதல் 2017 வரையில் தமிழ்மகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. 80 சிறுகதைகள் உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர் பயணித்த சுவாரஸ்மான அனுபவங்களை அனுமானிக்க உதவும் அற்புதமாக கதைகள் இதில் உள்ளன. வேலைவாய்ப்பு இன்மை, காதல் பரவசங்கள் தொடங்கி, வரலாறு, அறிவியல், அரசியல் எனப் பக்குவப்பட்ட படைப்புகளின் அணிவகுப்பு இது.

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது... இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இர...

ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும் சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் இதழ்தோறும் விளக்கமளித்தார். அந்தத் தொடரின் முழுத் தொகுப்பே நூலாகியிருக்கிறது. படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்...

ரூ.210/- திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில் மிகப் பொருத்தமாக வெளியாகி இருக்கிறது முரசொலி மாறன் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ நூல். சென்னையின் புகழ்மிக்க டாக்டர்களில் ஒருவராக விளங்கியவர் டாக்டர் நடேசனார். அவர்தாம் திராவிட இயக்கத்தின் நிறுவனர். சென்னை, திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த அவர் இல்லத்தில் 1912ம் ஆண்டு உருவான ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’ என்ற அமைப்பே பின்னாளில் மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. அந்த இயக...

முகப்பு
/ June 17, 2016

தமிழ்ப் பண்பாட்டுக்கென தனித்துவமான பல்வேறு அடையாளங்கள் உண்டு. இணையம் மூலம் அவற்றை இணைக்கும் முயற்சி இது. கைவினைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கலைப் பொருட்கள், தமிழ் நூல்கள், விதைகள், தானியங்கள், மூலிகைப் பொருட்கள், இயற்கை விவசாயப் பொருட்கள்,  தேன், தமிழ் எழுத்துக்கள் பொரித்த பனியன்கள்   ஆகியவை இந்த மின்னங்காடியில் கிடைக்கும்.

 

இந்தியாவில், ஆர்டர் செய்த 5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஆவன செய்வோம். வெளிநாடுகளுக்கு 10 நாட்கள் ஆகும். நூல்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் தனி. நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவோருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும்.  தமிழ் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்காகவும் இந்த வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Latest Products / புதுவரவு