குழந்தைகளைக் கொண்டாடுவோம்

ஜ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி.ஐந்து வயதுக் குழந்தையன்று,அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட்காமல் தன்னையும்,தன் வயதையத்த குழந்தைகளையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கிறவர்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிக் சிறுவனாக மட்டும் காட்டாமல் ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது;இதற்கேற்றபடி ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை,மகிழ்ச்சி அதிருப்தி,தேவைகள்,நாட்டங்கள்,திறமைகள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைச் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது…’’போன்ற அம்சங்களைத் தன் கடமைகளாக வரித்துக் கொள்கிறார் ஆசிரியர். 15ஆண்டு கால அனுபவப் பின்புலமுடையவர்;ஓராண்டு காலம்(ஆறு வயதுக் குழந்தைக.ளுக்குக் கல்வி கற்றுத்தரப் பணியாற்றியபோது) 800பக்கங்களுக்கு விரிந்த நாட்குறிப்பின் மடிப்படையில் தயாரிப்பு வகுப்பின் முதல் நாள், 20ம் நாள்84வது நாள், 122வது நாள்,கடைசியாக170வது நாள் பணிப்பதிவுகளையே இந்நூலாக நம்முன் வைத்திருக்கிறார் மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால்,நானும் ஒருசமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக்கூடாது. ரூ.100/-

எது நல்ல பள்ளி?

த.பரசுராமன் எது நல்ல பள்ளி?எது தரமான பள்ளி?தேர்ச்சி விழுக்காடு மட்டுமா?இசை ஓவியம் விளையாட்டு வேண்டாமா?ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா?ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா?பாடத்திட்டம் மட்டும் போதுமா? ரூ.10/-

டேஞ்சர் ஸ்கூல்

அப்பணசாமி குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும்,கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களும் அவர்களிடம் உடல்,மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன அவர்களின் கல்வி நோய்கள். ரூ.90/-

அம்பேத்கர்(கல்வி சிந்தனை)

ரவிக்குமார் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சனைகள் பற்றி பேசுவதோடு ஒவ்வொரு பல்கலை கழகத்துடன் இணைந்ததாக முதல்தரமான நூல் நிலையம் அமைய வேண்டும் என்னும் பரந்துபட்ட கல்வி பற்றிய ஆய்வு அடங்கிய நூல். ரூ.50/-

பெரியார்(கல்வி சிந்தனை)

அ. மார்க்ஸ் கல்வியின் பயன்பாடுகளை இரண்டு முக்கிய விஷயங்களை பெரியார் குறிப்பிடுகிறார்.ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும்,சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்னையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும். ரூ.90/-

பெட்ரண்ட் ரஸல்(கல்வி சிந்தனை)

பெட்ரண்ட் ரஸல் எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட்ரண்ட் ரஸல் கருத்தாகும். ரூ.110/-

தமிழக பள்ளிக் கல்வி

எஸ்.எஸ்.ராஜகோபால் “‘கி.பி.2000க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி’ என்பது சர்வதேச இலக்கு.இதை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல்திட்டம் வகுக்கும் பணியில் கல்வியாளரும்,பல பத்தாண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய அனுபவம் மிக்கவருமான ச.சீ.இராசகோபாலனை ஈடுபடுத்தியது.அதன் விளைவாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையைச் செயல்படுத்துவதற்கு அரசும்,கல்வித் துறையும் முனையவில்லை.இந்நிலையில் பல்வேறு பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியபோது,தனது நாற்பதாண்டு ஆசிரியப் பணியில் அறிந்திராத பல உண்மைகளை அறிந்ததாகக் கூறுகிறார் ஆசிரியர்.கும்பகோணம் பள்ளித் தீவிபத்து,அதைத் தொடர்ந்து இன்று விவாதத்திற்கு வந்துள்ள பல முக்கியப் பிரச்சனைகளான பெற்றோர்,அரசு,ஆசிரியர்களின் பொறுப்புகள்,சமச்சீர் கல்விமுறை,கல்வித்துறை முரண்பாடுகள்,பதின்நிலைப் பள்ளிகளும்,பல்கலைக்கழகமும்,மக்களின் எதிர்பார்ப்புகள்,பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள்,கல்வித் துறையின் முதற்கடமை,மொழிப்பாடம்,தேர்வுகள்,தொழிற்கல்வி,சுயகட்டுப்பாடு இவை பற்றிய தன் அனுபவத்தின் ஆழ்ந்த சமூகப் பொறுப்பின் அடிப்படையில் இக்கட்டுரைகளைத் ‘தினமணி,ஜனசத்தி,தமிழ் ஓசை’ நாளிதழ்களில் எழுதி வந்தவர் திரு.இராசகோபாலன்.அனைவருக்கும் கல்வி தொடர்பான பிரச்சினைகளில் தலையிட்டு தொடர்ந்து இயங்கி வரும் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம்2008ம் ஆண்டிற்கான முன்னோட்ட முயற்சியாக இந்நூல் உட்பட25நூல்களை கல்வி எனும் பொருள் சார்ந்தே வெளியிட்டு ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கு அடித்தளம் இட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.கல்வி குறித்த அக்கறையுள்ள அனைவரும் வாசித்து உள்வாங்கி விவாதிக்க வேண்டிய கருத்துகள் இவை.” ரூ.40/-

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை

பாவ்லோ ப்ரையிரே ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு பரிசாக வழங்கப்படும் ஒன்றாய் அர்த்தப்படுத்தப்ட்டுள்ளது என்கிறார் ஃப்ரையிரே ரூ.95/-

ரோஸ்

ஆயிஷா இரா.நடராசன் ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம்.’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை.நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது.ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது.ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத¢துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார்.அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்-குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேச¤க்கொள்ள வேண்டும்.இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.புத்தகத்தை வாங்கிவிடுவோம். ரூ.40/-

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

டி.வி.புருஷோத்தமன் முற்போக்குக் கல்விக்கான அணுகு முறையை ஏற்றுக்கொண்ட கல்வியாளர்கள் ஜான் ஆமோஸ் கொமேனியஸ்,ஜீன் ஜாக்கஸ் ரூசா,ஜோஹான் ஹென்ரிச்,பெஸ்ட்டலோசி,ஃபிரெட்ரிக் வில்லியம்ஸ் அகஸ்ட் ஃபுரோபல்,ஜான் டுயுவி,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரின் வாழ்க்கையும் சிந்தனைகளும்தான் பரிசோதிக்கப்படவும் அறிமுகப்படுத்தப் படவும் செய்யப்பட்டுள்ளன. ரூ.40/-