மனித உடலின் கதை

டேனியல் இ.லிபர்மேன் தமிழில் ப்ரவாஹன் நவீனம்,நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை,இரத்த அழுத்தம்,கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு,நாம் அவற்றுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு விஷ வளையத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறார் பேரா.லிபர்மேன். ரூ.470/-

கடவுள் உருவான கதை

டாக்டர் அஜய் கன்சால் தமிழில்: கி.ரமேஷ் ‘ஒரு கும்மிருட்டான இரவில் ஒரு பார்வையற்றவர்தான் சிறந்த வழிகாட்டி என்பது போல, இருண்ட காலத்தில் மக்கள் மதங்களால் சிறந்தமுறையில் வழிநடத்தப்பட்டனர்; ஒரு பார்வையற்றவனுக்கு, பார்வை பெற்ற மனிதனைவிட சாலைகளும், வழித்தடங்களும் இருளில் நன்கு தெரியும் எனினும், பகல்பொழுது வந்தபிறகும் பழைய பார்வையற்ற மனிதர்களை வழிகாட்டிகளாக உபயோகிப்பது அறிவுடைமையல்ல’ ரூ.170/-

நேனோ அடுத்த புரட்சி

மோகன் சுந்தர ராஜன் மோகன் சுந்தர ராஜன் சிறந்த அறிவியல் எழுத்தாளர்.தமிழில் இவரது’விண்வெளி அற்புதங்கள்’, ‘இன்றைய விண்வெளி’ஆகிய நூல்களையும்,ஆங்கிலத்தில் பல அறிவியல் நூல்களையும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.மைய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருது,சோவியத் லேண்ட் நேரு விருது,ஆகாசவாணி விருது,இந்திய அணுவியல் தகவல் தொடர்பு விருது(2013)ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.பல கல்வி நிறுவனங்களிலும்,தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். ரூ.290/-

அறிந்தும் அறியாமலும்

சுப.வீரபாண்டியன் நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை,தொழில்நுட்ப ஆற்றலை,கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன.தம்மின் தம் மக்கள் அறிவுடைமை கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம் அதே நேரம் இலக்கியம்,தத்துவம்,அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நில எனனவாக உள்ளது?அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை?சிலவற்றை அறிந்தும்,சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன்,என்ன காரணம்?விடை தேடுகிறது இந்நூல் ரூ.190/-

இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை

செங்கதிர் இத்தொகுப்பு ஒரு விசேஷ அம்சத்தைக் கொண்டுள்ளது.எழுத்தாளர்கள் பாத்திரங்களாக வரும் ஐந்து கதைகள் இதில் உள்ளன.மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய மொழியைக் கோருவதை செங்கதிர் கவனமாகக் கையாண்டிருக்கிறார்.அவர் மொழிபெயர்த்துள்ளவை தமிழ்ச் சிறுகதைத் திரட்டுக்கு ஒரு புதிய பரிமாணம். ரூ.150/-

ஒளியின் சுருக்கமான வரலாறு

ஆயிஷா இரா.நடராசன் இந்நூல் ஒளி குறித்து இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.மாணவ மாணவியர்,ஆசிரியர் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது அறிவியல் என்றால்”அறுவை”என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்து பயன்பெறவேண்டிய நூல் இது. ரூ.70/-

நிறமாலை

த.வி.வெங்கடேஸ்வரன் நம்மை சுற்றியுள்ள இயற்கை எத்தனை வண்ணமையமனது.சூரியன்,விண்மீன் முதலிய வான் பொருட்கள் வெளிபடுத்தும் ஒளி மட்டுமே நம்மை வந்தடைகிறது.எனினும் நம்மை வந்து அடையும் ஒளியை காடும் நிறமாலைமானி ஆய்வின் புகுந்து ஆய்ந்து வந்த வான் பொருட்கள் எவளவு வேகத்தில் ஓடுகின்றன,அவற்றில் உள்ள தனிமங்கள் என்னென்ன?அவற்றுக்கு காந்த புலம் உண்டா என பல செய்திகளையும் அறியலாம் என எளிமையாக விளக்குகிறது இந்த நூல் ரூ.50/-

நாஞ்சில் மன்னன் ரணகுல திலகன்

பேரா.பொ.இராஜமாணிக்கம் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் சிறுகதைகள், அறிவொளியில் மக்களை தட்டி எழுப்பிய உலக புகழ்பெற்ற அறிஞர்களின் நூங்கள், வின்யநிகளின் கதைகள், அறிவியல் கேள்வி பதில்கள் என பல நூல்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வரிசையில் இந்நூல் பாரம்பரியமான செயல்பாடுகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது ரூ.25/-