அறிவியல் முன்னோடி மேரி கியூரி

ஆர்.பெரியசாமி “மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.” ரூ.50/-

கனவுகளின் விளக்கம்

சிக்மண்ட் ப்ராய்ட் தமிழில் : நாகூர் ரூமி நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறும் விளக்கங்கள் உண்மையில் அதிர்வூட்டுபவை.கனவுகளை இப்படியெல்லாம் பகுத்து அறியமுடியுமா என்கிற வியப்பைத் தரும் பக்கங்களே இந்நூலில் அதிகம். ‘சைக்கோ அனலைசிஸ்’ என்னும் உளப்பகுப்பாய்வு முறையைப் பிரயோகித்து எழுதப்பட்டுள்ள இந்நூலை நாகூர் ரூமி தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகப்புரிதலுக்கு இலகுவாக்குகிறார்.முற்றுப்புள்ளி என்றும் கடைசி அத்தியாயத்தில் அறிஞர் ஃப்ராய்டின் விளக்கங்களை விமர்சனத் தொனியில் நாகூர் ரூமி எழுதிப்பார்ப்பது சிறப்பு. ரூ.80/-

அக்னிச் சுடர்கள் அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்

அரவிந்த் குப்தா “சுமார்40இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல்.ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும்.அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும்.கனவுகள் விரியும்,நம்பிக்கை வலுப்படும்.சாதனைகள் பல புரிய தெம்பும்,தெளிவும்,உற்சாகமும் பிறக்கும்” ரூ.160/-

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ஆயிஷா இரா.நடராசன் மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார். ரூ.30/-

கடவுள் பிறந்த கதை

எஸ்.ஏ.பெருமாள் கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது.பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது.நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது.மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன.பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது ரூ.15/-

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே அறிவியல் பூர்வமாகவும் உணர்த்துகிறது.

அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-  

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ரூ.160/-

ஃப்ராய்ட்

ஜோனத்தன் லியர் தமிழில்: ச. வின்சென்ட் மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். ரூ. 250.00

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீபன் ஹாக்கிங் தமிழில் : நலங்கிள்ளி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். ரூ.300.00