பேசத்தெரிந்த நிழல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனக் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம் ரூ.95/-

மலைகள் சப்தமிடுவதில்லை

எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள். ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன. ரூ.160/-

வாசக பர்வம்

எஸ். ராமகிருஷ்ணன் ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகளாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான, சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை. ரூ.165/-

உலக சினிமா

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வைகள், இந்திய சினிமா, சிறந்த இந்திய இயக்குனர்கள் பற்றிய கட்டுரைகள், குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்ட்ரி, திரைப்பட விழா, விருதுகள், பற்றிய பதிவுகள் என மிக விரிந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் புதிய பதிப்பு புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு. ரூ.900/-

நம் காலத்து நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன. நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கியவடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது. ரூ.250/-

எனதருமை டால்ஸ்டாய்

எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார். ரூ.100/-

என்றும் சுஜாதா

எஸ். ராமகிருஷ்ணன் இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கறைகளையே நான் முதன்மைப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புலகின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.225/-

செகாவின்மீது பனிபெய்கிறது

எஸ். ராமகிருஷ்ணன் உலக இலக்கிய ஆளுமைகள் தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின். துர்கனேவ், லெர்மன்தேவ், குப்ரின், கொரலங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்த தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார். ரூ.135/-

இருள் இனிது ஒளி இனிது

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா பார்வைகள் . உலக சினிமாவில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல், அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ரூ.130/-

கூழாங்கற்கள் பாடுகின்றன

எஸ். ராமகிருஷ்ணன் ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரைகளின் சிறப்பு. ஜென் நமக்குள் மாறாத சந்தோஷத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியும் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார். ரூ.60/-