போயிட்டு வாங்க சார்

ச.மாடசாமி “Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது.நூலின் ஆசிரியர்-ஜேம்ஸ் ஹில்டன்.-இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.” ரூ.35/-

இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?

என்.மணி “ஒவ்வொரு குழந்தையின் கல்வி மறுப்பும்,பல்வேறு விதங்களில்,பல்வேறு கோணங்களில் கல்வி உரிமை சட்டத்தை கேள்வி கேட்க வைத்திருக்கிறது.இந்தக் குழந்தைகளின் கல்வி உரிமையை இந்த அரசியல் பொருளாதார,சமூக மற்றும் பண்பாட்டு உளவியல் சூழலில் இருந்து அணுகித் தீர்க்க வேண்டும். “ ரூ.25/-

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஜேனஸ் கோர்ச்சாக் குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது.இருபத்தியொரு தலைப்புகளின் கீழ்,குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். ரூ.40/-

பள்ளிக் கல்வி

புத்தகம் பேசுது நேர்காணல்கள் புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. ரூ.70/-