இசைக்குமிழி

ஹவி ஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன் விலக்கிப் பார்க்கும் ரகசியங்களின் திரைச் சீலைகளுக்குப் பின்னே அசையும் ரகசிய நிழல்களை இக்கவிதைகள் எதிர்கொள்கின்றன. அப்போது அவை அடையும் தடுமாற்றங்கள், பயங்கள், குழப்பங்கள் இந்தக் கவிதைகளை நமது சமகாலத்தின் உணர்வுகளாக மாற்றுகின்றன. ரூ.60/-

இவளுக்கு இவள் என்றும் பேர்

கார்த்திகா நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்சி மிக்க அவதானங்களால் கவனிப்பிற்குரிய கவிஞராகிறார். ரூ.50/-

அவிழும் சொற்கள்

ரவிக்குமார் ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. அந்த வெளிப்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. வழமையான ஆண் மொழியிலிருந்து, அழகியலில் இருந்து விடுபட்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை தோழியாய், சக பயணியாய் புரிந்து கொள்ள வேண்டும் கவிதைகள் இவை. இதன் வரிகளில் இழையோடும் மென்மை ஒரு பூ மலர்வதைப் போல் விரிந்து, அதன் ரகசிய அறைகளை, அடுத்த தலைமுறைக்கான விதைகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது. கனிமொழி ரூ.50/-

நீராலானது

மனுஷ்ய புத்திரன் ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது. ரூ.150/-

பயனற்ற கண்ணீர்

சிவகாமி இத்தொகுதியிலுள்ள 66 கவிதைகளுமே தனித்தனியே வளமான சிந்தனைச் சிதறல்கள். சிவகாமியின் பல்நோக்குப் பார்வை செயலூக்ம் கொடுக்கவல்லது. இது மொழி பெயர்க்கப்படுமானால் தமிழுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கலாம். தனிப்பட்ட முறையில் பெண்கவிஞர்கள் என்றாலே பெருமூச்சும் உடலும்தான் முதன்மைப் பொருளாகும் (sighs and thighs) என்னும் அறிவற்ற குற்றச்சாட்டிலிருந்து பெண் எழுத்துக்களை மீட்டிருப்பது பெருமை அளிக்கிறது. இந்தக் கவிதைகளில் பெண்ணின் வேதனை மற்ற பல பொருள்களோடு இசைத்துத் தரப்பட்டிருக்கிறது…. காதம்பர் ரூ.60/-

கதவடைப்பு

சிவகாமி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். சுகுமாரன் ரூ.80/-

காற்றால் நடந்தேன்

சீனு ராமசாமி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். சுகுமாரன் ரூ.80/-

மஞ்சணத்தி

தமிழச்சி தங்கபாண்டியன் நகுலனின் ‘சுசீலா’ போலவும், கலாப்ரியாவின் ‘சசி’ போலவும், தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்….. ‘மஞ்சணத்தி மரம்’ போன்ற கவிதைகளில் வரும் ஆற்றல், ஒரு அரூவமான மொழிச்சக்தியாகும். தமிழச்சி ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், ஆங்கிலத் துறையினர் மூலம்தான் ‘மாடர்னிசம்’ அவர்கள் அவர்கள் மொழிகளில் நுழைந்தன. தமிழச்சி கவிதைகள் நேர்மாறாக மாடர்னிசத்தைத் தாண்டி நிற்கின்றன….. தமிழச்சி, தமிழ்க்கவிதை குவலயமயமாகும் தருணத்தில், பிராந்தியத்திலிருந்து ஒரு வனப்பேச்சி உருவாக்கிக்கொண்டு வருகிறார். இதுவும் பின் நவீனத்துவத்தின் கிழக்கத்திய போக்குத்தான். வனப்பேச்சியின் கதகதப்பில் பாவாடை மண்ணில் புரள இளவரசி போல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குட்டிப் பெண் நகரைச் சரணடைந்து, தாயாகி, நகரின் வெறுமையும், நாடு கடந்து தமிழ்ச்சாதி சந்திக்கும் சிறுமையும் கண்டு, தன் ஆதிக் கொள்கைகளைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் கவிதையில் இயங்கிக்கொண்டிருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் மென்மேலும் மெருகேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.190/-

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

அய்யப்ப மாதவன் தீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்சுமத்தின் சவால்களை இக்கவிதைகள் வலிமையுடன் எதிர்கொள்கின்றன ரூ.80/-

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன. இந்த வாழ்க்கையில் அன்பைப் போல தண்டிக்கப்படுகிற, நிராகரிக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற உணர்ச்சி வேறேதும் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் மனுஷ்ய புத்திரன் தனது கவிதைகளில் திரும்பத் திரும்ப சந்திக்கிறார். ரூ.190/-