சினிமா சினிமா

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா சினிமாவின் அழகியல் மற்றும் அவை முன் வைக்கும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.115/-

மழையா பெய்கிறது

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை. ரூ.95/-

கனவுகளின் நடனம்

சாரு நிவேதிதா இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. சாரு நிவேதிதா (முன்னுரையிலிருந்து) ரூ.110/-

கனவுகளின் நடனம்

சாரு நிவேதிதா இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. சாரு நிவேதிதா (முன்னுரையிலிருந்து) ரூ.110/-

கலையும் காமமும்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மனநிலைக்கு ஒரு நிரூபணம். ரூ.100/-

கடவுளும் சைத்தானும்

சாரு நிவேதிதா சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பீடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன. ரூ.85/-

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. லீனியர், நான் லீனியர், எதார்த்தம், புனைவுகள் எனப் பல்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கதைகள் நவீனச் சிறுகதை மொழிக்குப் புது ரத்தம் பாய்ச்சுபவை. இக்கதைகளின்மீது ‘அதிகாரபூர்வமான’ இலக்கிய மதிப்பீட்டாளர்கள் பாராட்டிய மௌனமும் காட்டிய கோபமும் இக்கதைகளின் எதிர்த் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே. பழக்கப்பட்ட கதையின் பாதைகளைப் புறக்கணித்து மொழியின் அபாயகரமான பாதைகளில் பயணிக்கின்றன இக்கதைகள். ரூ.190/-

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன. ரூ.60/-

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

சாரு நிவேதிதா எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாக இதையே குறிப்பிட இயலும். மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக, இலக்கியத்தில் அது உருவாக்கும் ஒழுக்கவியல் சார்ந்த அழகியலுக்கு எதிராக இந்த நாவல் ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும் படைக்கிறது. ரூ.60/-

சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது. ரூ.170/-