நன்றி ஓ ஹென்றி

எஸ்.சங்கரநாராயணன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்குமேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு, பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களுக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.

நீல நாயின் கண்கள்

ஆசிரியர் – அசதா மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ரூ. 100 உல்கின் த்லைசிறந்த சிறுக்தை எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகளின் தொகுப்பு .த்லைப்பு கதையான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் நீல நாயின் கண்கள், வில்லியம் பாக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா .ஜேம்ஸ் தார்பரின் வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை போன்ற அவசியம் படிக்க வேண்டிய அற்புத சிறுகதைகளின் தொகுப்பு இது

உருமாற்றம்

ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில் : பேரா. ச.வின்சென்ட் நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார். ரூ.200/-

அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-  

எட்டிக்குளத்துப் பேய்கள்

தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம், மொழி, வாழ்வியல், விவசாயம், விஞ்ஞானம் என அனைத்துத் துறையிலும் செழுமையான ஞானம் பெற்றவர் இரா.கோவர்தன், இலக்கியத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். எட்டிக்குளத்துப் பேய்கள் அவருடைய நெடுங்கதைகளின் தொகுப்பு. ரஷ்ய இலக்கிய தாக்கம் கொண்ட அவருடைய எழுத்துக்கள் தமிழுக்குப் புதிய வரவு. ரூ.180

மீன்மலர்

கடவுள், இசை, காமம் என எல்லாவற்றையுமே விவாதத்துக்குள்ளாக்கும் வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு. மீனையும் மலரையும் ஒப்புமைப்படுத்தும் சிறுகதை ஒரு தத்துவவாதத்தை சிறுகதையினூடே சிறப்பாகச் செய்திருக்கிறது. மனக்குகை ஓவியம் சிறுகதை, மனித வாழ்வின் உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. மனம் என அமையப் பெற்ற உயிரினமான மனிதனுக்கான சிக்கலை விவரிக்கும் கதை அது. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத நீரோடை போன்ற நடையில் இவற்றை வாசிப்பது பேரனுபவம். ரூ. 85/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-