மண்டேலா ரிவோனியா சதி வழக்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய எழுச்சி உரை

வீ.பா.கணேசன் “ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்சன் மண்டேலா கம்யூனிஸ ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ரிவோனியா சதி வழக்கில் ஆற்றிய வீர உரை தென் ஆப்ரிக்க இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது. “ ரூ.35/-

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

இரா.இயேசுதாஸ் அன்னல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது. ரூ.90/-

இலங்கை: தமிழர் பிரச்சனை ஒரு துயரத்தின் வரலாறு

என்.குணசேகரன் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து தோழர்.குணசேகரன் இளைஞர் முழக்கத்தில் எழுதிய கட்டுரைத் தொடரின் நூல் வடிவம.இன்றைய நிலையில் வரலாற்று ரீதியாகவும்,அறிவியல் பூர்வமாகவும் பிரச்சனையை தீர்ப்பதற்கான திசைவழியையும் சுட்டிக் காட்டுகின்றார். ரூ.50/-

மோடி அரசாங்கம்:வகுப்புவாதத்தின் புதிய அலை

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி “சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ்.தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.” …மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இடதுசாரிகளும்,ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும்,கருத்துகளையும் கொண்ட நூல். ரூ.160/-

பொலிவியா:சேகுவேரா இன்றும் வாழ்கிறார்

டி.லட்சுமணன் சே குவேராவின் எண்ணத்தை ஈடேற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக லத்தீன் அமெரிக்காவில் சாவேஸ்,மெரால்ஸ் திகழ்கிறார்கள்.இந்நூல் பொலிவியாவின் சமீபத்திய அரசியல் மாற்றத்தை விவரிக்கிறது. ரூ.15/-