நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்

யமுனா ராஜேந்திரன் மஹ்மூத் தர்வீஷ் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்து வருபவர். பாலஸ்தீனத்தில் பர்வேஎனும் சிற்றூரில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி பிறந்த அவர் தமது 67ஆம் வயதில்,2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரண முற்றார். தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தெனக்கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும், ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புக்களின் தொகுதி இது. ரூ.300/-

ஹிட்லரின் முதல் புகைப்படம்

யமுனா ராஜேந்திரன் இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்காவின் கவிதைகளுக்குள் நாம் செல்லும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்து போகிறோம். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் என்ற உண்மை பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தர்வகளுக்குப் புரியும். கோவை ஞானி ரூ.60/-  

சினிமாவின் இடங்கள்

சி.வி பாலகிருஷ்ணன் திரைக்கலையின் மகத்தான அனுபவங்களைத் தருகின்ற கிளாசிக் திரைப்படங்களினூடாகவும் உலக சினிமாவில் பெருமளவு கவனம் பெற்ற சமகாலப் படைப்புகளி னூடாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஜாம்பவான்களி னூடாகவும் கடந்து செல்கிற இந்தப் படைப்பு திரைக்கலையின் மீதான ஆழமான காதலையும் திரை ஊடகத்துக்கு இருக்கின்ற, பார்வையாளனைக் கவர்ந்து வசியப்படுத்துகின்ற அற்புதமான சக்தியையும் பிரதிபலிக்கிறது. கேரள அரசின் சிறந்த திரைப்பட நூலுக்கான பரிசைப் பெற்றது. ரூ.60/-

லீலை

சுகுமாரன் கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கள் இவை.வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை. நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும், இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம். சுகுமாரன் முன்னுரையிலிருந்து. ரூ.100/-

லைம்லைட்

ஸோகன்லால் மலையாளத்தில் இதுவரை யாரும் சோதித்துப் பார்க்காத கருப்பொருளையும் கதைசொல்லும் முறைகளையும் கொண்டு புத்தம் புதிய ஒரு நாவல் சிற்பத்தை ஸோகன்லால் உருவாக்கியிருக்கிறார். டாக்டர். ஜார்ஜ் ஓணக்கூர் (மலையாள நாவல் எழுத்தாளர்) இன்று நமது திரையுலகில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒரு எழுத்தாளனின் எதிர் வினையாற்றலாகும் இது. எழுத்துக்களின் ஆற்றல் மூலம் இதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது இயக்குநருமான ஒரு எழுத்தாளன் என்று கூறுவதில் மலையாளத் திரை உலகம் பெருமை கொள்ளலாம் ஜகதீஷ் (மலையாளத் திரைப்பட நடிகர்) எள்ளல் வட்டத்தினுள் நின்று கொண்டு மிக நுட்பமாக திரை உலகின் சிக்கல்களைக் குறித்து இங்கு உரக்கக் கூறியிருக்கிறார். திரைப்படத்¬த் தாண்டி வாழ்க்கையின் பிற துறைகளுக்கும் இந்த நுட்பமான பார்வை மிகவும் பொருந்துவதாகவே உள்ளது. லெனின் ராஜேந்திரன் (மலையாள திரைப்பட இயக்குனர்) மலையாள திரைப்படத்தின் வளர்ச்சிப் போக்கில் உள்ள எண்ணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் என்னென்னவென்று புரிந்துகொள்ள இந்த நாவலை அன்புடன் நான் பரிந்துரைக்கிறேன் ஸ்ரீகுமாரன் தம்பி (மலையாளத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர்) ரூ.45/-

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா

ட்டி.டி.ராமகிருஷ்ணன் தமிழில்: குறிஞ்சிவேலன் கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹைபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, – பி.கே.ஸ்ரீகுமார் – மாத்ருபூமி வார இதழ் மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது. – வி.கே.ஸ்ரீராமன் – மலையாள மனோரமா காளிதாசனின் கற்பனைகள் முதல் ஜார்ஜ்வர்கீஸ் ஜோசப்பின் கணிதவியல் வரலாறு வரையில், ஹைபேஷ்யன் அறிவியல் தத்துவங்கள் முதல் பெரூவியன் துர்மந்திரவாதம் வரையில், நாஸிக்யம்புகள் முதல் கொண்டனாமோ வரையில் இடம் காலங்களையும் நாகரிகங்களையும் கடந்து செல்லும் வரலாற்று மண்டலங்களின் மயில்தோகையாட்டம்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் உள்ளது. – ஷாஜி ஜேக்கப்-மலையாளம் வார இதழ் வழக்கமின்மையிலிருந்து இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின் நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது, – பி.கே. ராஜசேகரன்-இந்தியா டுடே ஓ.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கும் என்.எஸ். மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது. – கே.என்.ஷாஜி – பச்சைக்குதிர ரூ.275/-

தாந்தரீகம்

உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் அரவிந்த் & சாந்தா காலே தமிழில்: பெரு. முருகன் அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும் நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பால்வெளி மண்டலமும், ஆகாசத்தில் உறைகின்ற பிரபஞ்சமும், உங்கள் கைகளில் இறுக்கப்பட்டு கிடக்கின்ற உங்களின் துணையும், நீங்களே. எரிகின்ற இன்பத் தீயில் எரியப்போகும் நீங்கள் காலத்தை வென்று சாகாவரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள். ரூ.150/-

முல்லைப் பெரியாறு அணை

நீதியரசர். கே. டி. தாமஸ் தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான். ரூ.120/-

எழில் மரம்

ஜேம்ஸ் டூலி தமிழில் : லியோ ஜோசப் பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம்  பழைய ஹைதராபாத் நகரின்  சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட  சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில்  மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது. ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது. ஆப்ப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பய்ணம் நீண்டது. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது. ரூ.360/-  

அறிவியல் வளர்ச்சி வன்முறை

  கிளாட் ஆல்வாரஸ் தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் ”வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும். வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும். ரூ.200/-