தியான யாத்திரை

ஆசிரியர் – அஜயன் பாலா ரூ. 70 இமயமலையின் புண்ணியதலங்களான ஹரித்துவார் கேதார்நாத் பத்ரிநாத் ,கங்கோத்ரி, மற்றும் கோமுக் ஆகிய இடங்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா சாதகர்களுடன் ஆசிரியர் மேற்கொண்ட பயண அனுபவமே இந்நூல். கண் முன் இமய மலையை காட்சிகளாக கொண்டுவந்து நிறுத்தி இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் அவ்ற்றின் பின்னால் புதைந்துகிடக்கும் மகத்தான் ரகசியங்களையும் பற்றி பேசுகிறது இந்நூல்

செம்மொழி சிற்பிகள்

ஆசிரியர் – அஜயன்பாலா விலை- 1,200 உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரண்மான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உயர் ரக தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் தடிமனான் அட்டையுடன் உருவாக்கம் கொண்ட இந்நூல் தமிழை போற்றி பாதுகாக்கும் ஒவ்வொருவர் வீட்டின் அலமாரியிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்

ஆசிரியர்- அஜயன் பாலா கட்டுரை விலை- 120 வாசிப்புகள், அவதானிப்புகள், நட்புகள், மற்றும் பயணங்களினூடே தான் பெற்ற அனௌபவங்களையும் கலை , இலக்கியம், சினிமா வில் தன்னை பாதித்த ஆளுமைகள் குறித்தும் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

உலக சினிமா வரலாறு – பாகம் – 2

உலக சினிமா வரலாறு, பாகம் II ஆசிரியர்- அஜயன் பாலா சினிமா விலை -260 1929 –முதல் 1972 வரை உல்க சினிமாவின் போக்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்,பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலிய சினிமாக்களின் புதிய அலை இயக்குனர்களால் சினிமாவுக்குள் உண்டான புதிய எழுச்சி . ஜான் போர்ட் , ஹிட்ச்காக், சத்யஜித்ரே, அகிராகுரசேவா, இங்மர்பெர்க்மன்,பெலினி, போன்ற உல்க சினிமாவை பாதித்த ஆளுமைகளின் வரலாறு அவர்கள் படங்கள் குறித்த ஆயுவுகளை உல்க வரலாற்றின் பின்புலத்துடன் அலசும் அரிய நூல்

உலக சினிமா வரலாறு – பாகம் 1

உலக சினிமா வரலாறு, பாகம் 1 ஆசிரியர்- அஜயன் பாலா/ சினிமா/ விலை -160 1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்