குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

ரானா அயூப் 2010ஆம் ஆண்டு, அன்றைக்கு ‘தெஹல்கா’ (Tehelka) இதழில் பணியாற்றிய பத்திரிகையாளராகிய ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகை புலனாய்வுப் பணியை தன் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டார். 2001ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்தவர்கள், 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பிறகு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து மனம் திறந்து பேசியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். குஜராத் அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அரசு இயந்திரமும் எவ்வாறு ஒரு சமூகப் படுகொலை நடைபெற காரணமாகவும், மௌன சாட்சியமாகவும் இருந்தனர் என்பதை அவர்களது வாக்கு மூலங்களாகவே கொண்டுவந்தார். அரசியல் காரணங்களால் அவரது நிறுவனம் அவரது பதிவுகளை பதிப்பிக்க மறுத்த நிலையில், ‘Gujarat files’ – குஜராத் கோப்புகள் என்ற பெயரில் தானே சொந்தமாக பதிப்பித்துள்ளார். நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘குஜராத் கோப்புகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலய வெளியீடாக… ரூ.170/-

தேர்தல் களம்

  1. வேளாண்சமூகத்தை புறக்கணித்த திமுக – அதிமுக 87-88 ல் விதை, உரம், பூச்சிமருந்து, வாடகை, கூலி ஆகிய உற்பத்திச் செலவை அடிப்படையாக வைத்து தற்போது விலை தீர்மானிக்கப்படுகிறது. இதை விட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மைத்துறையின் பங்கு 2001-02ம் ஆண்டில் 17.54 சதவீதமாக இருந்தது 2009-10ல் 8.78 சதவீதமாகவும் 2014-15ல் 7.25 ஆகவும் குறைந்துள்ளது… 50 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ள தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு ஆண்டுக்கு ஐந்தாயிரத்து 500 கோடி அளவுக்குத்தான் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஒதுக்கினார்கள். இதனால் வங்கிகளில் கடன் பெற முடியாமல், தனியாரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை’ என்ற துயர முடிவை எட்டினர். கரும்பு அனுப்பிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் 15 சதவீத வட்டியுடன் பாக்கியைத் தர வேண்டுமென்று சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் கரும்பையும் கொடுத்துவிட்டு காசுக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் விவசாயிகள் தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க இருப்பதாகவும் 2006 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வாக்குறுதியளித்தது. அடுத்த சில மாதங்களில் வழக்கம் போல், பின்வாங்கி 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை என கையை விரித்தார் கருணாநிதி… ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் மட்டுமே விவசாயத்தில் வேலை கிடைக்கிறது. மீதி நாட்களுக்கு? விவசாயத்தில் கிடைக்கும் வேலையை மட்டுமே நம்பி எந்தவொரு விவசாயத் தொழிலாளியும் வாழ முடியாது என்பது இன்று ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமை. கடந்த 48 ஆண்டு காலமாக மாறி, மாறி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்தோம். மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை. ஆண்டவர்களின் வாழ்வில் தான் வசந்தம் வீசியது. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வளவு காலமும் வலுவான மாற்று அணி என்பது உருவாகவில்லை. இப்போது உருவாகியுள்ள வலுவான மாற்று அணியை…

இடது திருப்பம் எளிதல்ல

ச.சுப்பாராவ் தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத்2014பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை,ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத்,அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார்.கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம்.பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம்.ஆனால் போராட்டத்தின் மூலமாக சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று,விஸ்வரூபமாக மீண்டும் எழும்.என்பார் கார்ல் மார்க்ஸ். “இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது.இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது.ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன்” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி,இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை,அவர்கள் வந்த பாதையை,சந்தித்த சவால்களை,அவற்றை எதிர்கொண்டவிதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். ரூ.260/-

நேரு கொள்கையும் நடைமுறையும்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நேருவின் கொள்கைகள் நடைமுறை பற்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் இ.எம்.எஸ்.இந்நூலில் ஆய்வு செய்கிறார். ரூ.140/-

100 கேள்வி – பதில்கள் ஆன்மிகமா? அறிவியலா?

சு.பொ.அகத்தியலிங்கம் எல்லாவற்றுக்கும் அறிவியல் விடை கண்டுவிட்டதா? அறிவியல் பார்வை என்பது சயின்ஸ் பட்டதாரி ஆவதா? நாசா சொன்ன பிறகும் நாத்திகம் பேசலாமா? பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதர் தோன்றுகின்றார்? இப்படி தீக்கதிர் வண்ணக்கதிரில் தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் தொடர்ந்து எழுதி வந்த கேள்வி பதில். ஆன்மிகம் – அறிவியல் குறித்து எப்போதும் எழுப்பப்படும் வினாக்களுக்கு எளிய, அழகிய தமிழில் விளக்கம் அளிக்கிறார். ரூ.125/-  

இந்துத்துவா என்றால் என்ன?

இரா.சிசுபாலன் தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற ‘கடவுள்களை’ வணங்குபவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்றும் தங்கள் மதம் ‘இந்துமதம்’ என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைப் பிடித்துவரும் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை கருப்பண சாமியையோ, முனியப்ப சாமியையோ வழிபடுவர் ‘கிடா வெட்டி பொங்கல் வைப்பர்; ஆனால் ‘இந்துத்துவா’ பேசுபவர்களோ மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சேக்கு படையல் வைப்பவர்கள். அவர்கள் யார், அவர்கள் யாருடைய நலுனுக்காக பணியாற்றுகின்றனர் அவர்களுது மகவெறியன் அடிப்படை என்ன என்பது போன்ற சந்தேகங்களை வினா – விடை வடிவில் எளிய தமிழில் விளக்கும் நூல். ரூ.15/-

Communist Histories volume 1

Vijay Prashad The contemporary world cannot be fully understood without the struggles of the communists over the past century. Rooted in South Asia, Communist. has a global sweep, with essays examining communist praxis from bengal to Maharashtra, from Cuba to China. This volume – the first in a series – looks closely at the Communist international with an emphasis on how the core idea of internationalism impacted the campaigns of Communists. Deeply researched and richly written, these essays are a counterpoint to the erasure of Communist movements in bourgeois historiography. ரூ825/-

மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்

சீத்தாராம் யெச்சூரி மோடியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. தொழிலாளர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்துள்ள யுத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் சீர் குலைவு தலித் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு என்பதையெல்லாம் கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ரூ.50/-

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்

ப.கு.ராஜன் சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்றாக இருந்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. 2009 ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் பரிசளித்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. லத்தீன் அமெரிக்க வரலாறு, அரசியல் போராட்டங்கள் அதன் இலக்கியங்கள் என ஒரு வண்ணமிகு கண்டத்தை ஒரே நூலின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்.’ உலகம் முழுவதும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, முதன்முறையாக ஒரு இந்திய மொழியில் – -தமிழில் வரும் நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. ரூ.350/-