வடக்கேமுறி அலிமா

கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ரூ.100/-

மீன்குகைவாசிகள்

கீரனூர் ஜாகிர்ராஜா வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு. ரூ.190/-

மீன்காரத் தெரு

கீரனூர் ஜாகிர்ராஜா மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும். – கீரனூர் ஜாகிர்ராஜா ரூ.110/-

ஜின்னாவின் டைரி

கீரனுர் ஜாகிர் ராஜா “ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை. ரூ.150/-

கருத்த லெப்பை

கீரனூர் ஜாகிர்ராஜா இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் – தமிழ்ச்சேவை இரண்டு.” ரூ.70/-

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு. ரூ.140/-