சுஜாதாவின் குறுநாவல்கள் 2

சுஜாதா சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றிக் கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள், அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள். ரூ.350/-

சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதா இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே. ரூ.380/-

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது. ரூ.180/-

வேருலகு

மெலிஞ்சி முத்தன் மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.- எஸ். ராமகிருஷ்ணன். ரூ.40/-

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை. ரூ.100/-

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

சுஜாதா சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன. ரூ.500/-

மரகதத் தீவு

  காஞ்சனா தாமோதரன் காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன. ரூ.100/-

சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதா சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை. ரூ.300/-