ஐராபாசீ

வேலு சரவணன் நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம். ரூ.75/-

கால் முளைத்த கதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.130/-

புதிய நீதிக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. ரூ.120/-

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அங்கே அவனுக்கு நடக்கும் வினோத சம்பவங்கள் தான் இந்த கதை. ரூ.50/-