அவன் ஆனது

‘அவன் ஆனது’ நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சா. கந்தசாமிக்கு முன்னுரையும் வேண்டாம்; மதிப்புரையும் வேண்டாம். அவர் பெயர் போட்டிருந்தால் உடனே அதைப் படிக்கக் கிடைத்த பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவர் மேதைமை, நேர்த்தியைத் தவிர வேறெதையும் தந்ததும் கிடையாது; ஏற்றதும் கிடையாது. – ஞானக்கூத்தன் ரூ.170/-

ஆறுமுகசாமியின் ஆடுகள்

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. இத்தொகுப்பில் சா. கந்தசாமியின் தொடக்க காலக் கதைகளில் ஒன்றான புகழ்பெற்ற ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை முதல் அண்மைக் காலத்துக் கதைகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. ரூ.220/-  

ரம்பையும் நாச்சியாரும்

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார். – சா.கந்தசாமி ரூ.100/-

தக்கையின் மீது நான்கு கண்கள்

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். – சா.கந்தசாமி ரூ.100/-

பெருமழை நாட்கள்

பெரும் மழை நாட்கள் நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. – சா.கந்தசாமி ரூ.160/-

சாயாவனம்

சா.கந்தசாமி ‘சாயாவனம்’ ஓர் அபூர்வமான நாவல், தமிழ் படைப்பிலக்கியத்தில் ஒரு மைல்கல். நடை புதுமையானது. ஆனால் பரிசுத்தம் தோன்ற இருப்பது. முதலில் ஒரு கதை சொல்வதுபோல் தொடங்குகிறது கந்தசாமியின் உரைநடை. காலதாமதமே செய்யாமல் வனம் அழிப்புப் பகுதி வந்தடைந்தவுடன், ரசம் மிகுந்த நீண்ட கவிதையாக உருமாறுகிறது. ரூ.160/-

தொலைந்துபோனவர்கள்

பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது. – சா.கந்தசாமி ரூ.150/-