நாகதிசை

ராணி திலக் இயற்கையின் ஜீவிதமே என்னை மையம் கொள்கிறது. வீதி வீசும் சாட்டை என் ஆன்மாவைப் புண்படுத்துகிறது. நெருப்பிலிருந்து மலரைப் பறித்தவன் போல என் துயரமான ஆன்மாவிலிருந்து கனவுகளை,மாய எதார்த்தங்களைப் பறித்து அனைவருக்கும் சூட்டுகிறேன்.(ராணி திலக்) ரூ.40/-

நகரத்திற்கு வெளியே

விஜய் மகேந்திரன் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப் பிறழ்வை உருவாக்குபவை. இந்தப் பிறழ்வை எழுத முற்படும் விஜய் மகேந்திரன் நகரத்தின் புதிர் வழிகள் தரும் அபத்தங்களையும் ஆயாசங்களையும் மெல்லிய கேலிச் சித்திரங்களாக உருவாக்குகிறார். சீரான கதை சொல்லும் முறைமையும் குழப்பமில்லாத மொழியும் இவரது இந்த முதல் கதைத்தொகுப்பை கவனத்திற்குரியதாக்குகின்றன. ரூ.50/-

அவரவர் வழி

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ்ப் புனைகதை மொழியில் தனித்துவமான ஒரு வெளிப்பாட்டு முறைமையைக் கொண்டவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். குளத்தின் மையத்திலிருந்து பிரிந்து செல்லும் நீர்வளையங்கள் போல, பாத்திரங்களும் சம்பவங்களும் இக்கதைகளில் தொடர்ந்து கலைந்து செல்கின்றன. வாழ்வின் நிச்சயமற்ற பாதைகளில் தற்செயல்களின் சூதாட்டங்கள் வழியே நிகழும் வினோத நாடகங்களை சூட்சுமமான மொழியில் இக்கதைகள் எழுதிச் செல்கின்றன. ரூ.50/-

நீர்ப்பறவைகளின் தியானம்

யுவன் சந்திரசேகர் ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்திரமான அடுக்குகளுக்குள் கலந்துவிடுவதன் மூலம் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கண்டடைவதன் மூலம் உருவாகும் புனைவுகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். இவை 2007 டிசம்பரில் வெளிவந்த Ôயுவன் சந்திரசேகர் கதைகள்’ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்டவை ரூ.120/-

சித்திரப்புலி

எஸ். செந்தில் குமார் விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களின் முன்பு. கசப்பின் சுவையைக் கொண்ட வரிகளுக்குப் பின்னால், நின்று பார்க்கும் கதாபாத்திரங்கள் சில வேளைகளில் வெளியேறி வந்து வரிகளுக்கு முன் நின்று கொண்டு சிரிக்கிறார்கள். கையை விட்டுச் சென்ற கடந்த காலத்தின் மகிழ்வினாலான தருணங்கள் திரும்பவும் வந்தடையாதா என்று ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள். இக்கதைகளுக்குப் பின்னால் இருக்கும் வெளிச்சங்களும், இருளும் மேலும் புனைவாக்கப்பட்டிருக்கிறது என்பது கதைகளின் செயல் வடிவம் சார்ந்து சாத்தியமானது. ரூ.80/-

புதிதாக இரண்டு முகங்கள்

இந்திரஜித் சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனைகளைக் கலைக்க விழைகின்றன. மனச் சோர்வுடன் அவற்றிலிருந்து விலகிச் செல்கின்றன. மிகுந்த வடிவ நேர்த்தியும் கச்சிதமும் கொண்ட இந்திரஜித்தின் கதைகள் நவீன புனைவியலாளர்களில் அவரை தனித்துவமுடன் இனம் காட்டுகிறது. ரூ.50/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம். ரூ.480/-

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

எஸ். ராமகிருஷ்ணன் நவீன மனிதகுல வரலாறு புலம்யெர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் பல்வேறு கலாச்சாரக் குழப்பங்களுக்கு ஆளாவதும் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பெரும் மனித அனுபவமாக மாறிவிட்டது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள் சிதறுண்டுபோன நவீன மனித வாழ்க்கை குறித்த காட்சிகளை முன்வைக்கின்றன. இக்கதைகள் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்காக பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவை. ரூ.50/-

பூனைகள் இல்லாத வீடு

சந்திரா சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்ணின் – மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை. திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது. ரூ.60/-