மிதவை

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது… பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி… – நாஞ்சில் நாடன் ரூ.120/-

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய  ‘இவன்தான் பாலா’ என்று ‘ஆனந்த விகடன்’ வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான ‘இடலாக்குடி ராசா’வைக் குறிப்பிட்டு  அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை. 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது. – நாஞ்சில் நாடன் ரூ.90/-