ஈழத்து நாட்டார் பாடல்கள்

ஈழவாணி நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. – கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது. – கழனியூரன் ரூ.180/-

மறைவாய் சொன்ன கதைகள்

கி. ராஜநாராயணன் கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை. ரூ.290/-

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்

கழனியூரன் ‘நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக்கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது. ரூ.175/-