401 காதல் கவிதைகள்

சுஜாதா தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும். ரூ.190/-

திருக்குறள் புதிய உரை

சுஜாதா திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. ரூ.115/-

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமும்

சுஜாதா பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன். ரூ.300/-

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

சுஜாதா தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது. ரூ.330/-

பேச்சரவம் கேட்டிலையோ

தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன்வைக்கிறார். விவாதங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும் தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் அவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன. மனத்தெளிவும் நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுகளின் வழியே தமிழச்சி ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார். ரூ.100/-

எப்போதுமிருக்கும் கதை

எஸ். ராமகிருஷ்ணன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைகதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன்வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம். ரூ.65/-

ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்

மணா மணா தீராநதியிலும் புதிய பார்வையிலும் முப்பது ஆளுமைகளுடன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என விரியும் இந்த உரையாடல்கள் அனுபவம் சார்ந்தும் கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன. ரூ.300/-

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள், அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது. ரூ.130/-

பேசிக்கடந்த தூரம்

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகளை சமூகம் குறித்த உரத்த சிந்தனைகளை, சமகால இலக்கியப் போக்குகளைப் புனைவின் நிழல்படாமல் பேசி அறிந்து கொள்ளும் ஒரு சவாலே நேர்காணல்கள். இது எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த நேர்காணல்களின் தொகைநூல். முன்னதாக, எப்போதுமிருக்கும் கதை என்ற அவரது நேர்காணல்களின் இரண்டாவது தொகுப்பு நூல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடைவெளியற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதையே இந்த நேர்காணல்கள் அடையாளம் காட்டுகின்றன. ரூ.130/-