தாழப்பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்சனின் நுட்பமான மனதினையும் பன்முக ஆளுமையினையும் வெளிப்படுத்துகின்றன. தனது அற்புதமான மொழிநடையால் தான் எழுதுகிற எந்தப் பதிவையும் ஒரு வசீகரமான படைப்பாக மாற்றிவிடும் பிரபஞ்சனின் ஆற்றலுக்கு இந்த நூல் ஒரு உதாரணம். ரூ.85/-

நாளைக்கும் வரும் கிளிகள்

ரூ.140/- பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.

மரி என்கிற ஆட்டுக்குட்டி

மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்

யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார். ரூ.140/- – பிரபஞ்சன்

மகாபாரதம்

சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன் ரூ.300/-

கதை மழை

பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. – பிரபஞ்சன் ரூ.80/-

மயிலிறகு குட்டிபோட்டது

பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக்கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களைச் சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருக்கிறது. – பிரபஞ்சன் ரூ.130/-

அந்தக் கதவு மூடப்படுவதில்லை

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும். ரூ.140/-

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். – பிரபஞ்சன் ரூ.130/-

அப்பாவின் வேஷ்டி

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். – பிரபஞ்சன் ரூ.200/-