ஆடு ஜீவிதம்

பென்யாமின் இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவ’ கதை. அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்குப் போய் அகப்பட்டு’கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியச் செய்கிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது. ரூ.140/-

ஊரின் மிக அழகான பெண்

சாரு நிவேதிதா சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ரூ.190/-

நாளை வெகுதூரம்

ஜி. குப்புசாமி ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை. ரூ.130/-

கன்யாவனங்கள்

புனத்தில் குஞ்ஞ்ப்துல்லா 70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது. ரூ.85/-

திசை

சி.வி பாலகிருஷ்ணன் கேரளத்தில் கஸபா என்னும் கற்பனை நகரம் ஒன்றை எழுப்பிக் காட்டி, அதன் மனிதர்களின் வழி இன்றைய வாழ்வு நிலை எவ்வளவு பயங்கரமானதொரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிகார வர்க்கம் விளிம்பு நிலை மனிதர்கள் மேல் செலுத்தும் அடக்குமுறைகள். கம்யூனிசம் என்னும் சித்தாந்தமே உருக்குலைந்துவிட்ட நிலைமை. புரட்சி என்னும் ஒன்று இனி உண்டா என்ற ஏக்கம், மனிதாபிமானம் மதிப்பிழந்து அராஜகம் மட்டுமே வெற்றிபெறுகின்ற புதிர், இவையெல்லாவற்றையும் கஸபா நகரத்து மனிதர்களின் வெளிவர முடியாத புதிர்ச்சூழலுக்குள் (லாபிரிந்த்) நிகழும் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் அறியும்போது நாம் இப்போது எந்த திசையில் இருக்கிறோம் என்ற கேள்வியை வாசகனுக்குள் இந்த நாவல் நிச்சயம் எழுப்பும். இன்றைய தலைமுறை மலையாள நாவலாசிரியர்களில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். அவருடைய புதிர்த்தன்மை மிகுந்த எழுத்து மலையாளத்தில் மிகவும் ரசிக்கப்படுகிறது. ரூ.140/-

காளி நாடகம்

உன்னி ஆர் தற்கால மலையாளச் சிறுகதையில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக்காட்டும் ஒரே தொகுப்பாகவும் கொள்ளலாம். சமகாலப் பார்வையிலிருந்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள் நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் சாயல்களை எதிர்கொள்கிறது. ரூ.50/-

அன்னா அக்மதோவா கவிதைகள்

லதா ராமகிருஷ்ணன் அன்னா அக்மதோவாவாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான துயரங்களின் சாட்சியமாகவும் மன்னிக்க முடியாத குற்றங்களின் பதிவேடாகவும் நீக்க முடியாத நினைவுகளின் எச்சரிக்கையாகவும் திகழ்கின்றன. தனிமைக்கும் நேசத்திற்கும் கண்ணீருக்கும் கொடுங்கோன்மைக்கும் இடையே இடையறாது தத்தளித்துக் கொண்டிருக்கும் அவரது சொற்கள் நம்முடைய காலத்தின் மகத்தான கவிகளில் ஒருவராக அவரை இனம் காட்டுகின்றன. அன்னா அக்மதோவாவின் பல்வேறு கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் விரிவான தொகுப்பு இது. ரூ.110/-

சந்தன மரங்கள்

கமலாதாஸ் இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை எல்லாமே அனுமதிக்கப்பட்ட உலகில், தங்குதடையற்ற காதலின் வல்லமையால் ஒளி பெற்ற உலகில் இக்கதைகள் நிகழ்கின்றன. ஜெயமோகன் முன்னுரையிலிருந்து ரூ.100/-

இது எனது நகரம் இல்லை

யமுனா ராஜேந்திரன் மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். உணர்வுபூர்வமாகவோ பொருளாதார அடிப்பயிலோ மேற்கில் வாழ்வது எனக்குச் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன். தஸ்லீமா நஸ் ரீன் ரூ.75/-

ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

யமுனா ராஜேந்திரன் எனது கவிதைகள் அவிழும் பிரபஞ்சம் எனது உடல்தான். என்னளவில் எழுதுவது என்பது அடிப்படையில் உடல்சார்ந்த இயக்கம்தான். நான் எப்போதும் சொல்வதுண்டு, நான் எனது விரல் நகங்களால்தான் எழுதுகிறேன். எனது சருமத்தின் மீது எனது உடலில் எழுதுகிறேன். உடலின் மேற்பரப்பை நான் உறித்தெடுக்க விரும்புகிறேன். அதற்காக எனது உடம்பையும் எனது நகங்களையும் நான் உபயோகிக்கிறேன். இவைகளே எனது கருவிகள். சிருங்காரமே வாழ்வின் நாடித்துடிப்பு, மரணத்துடன் சிருங்காரம் நெருக்கமாக உறவுகொண்டிருக்கிறது என்றபோதும, நான் வாழ்கிறேன் என்பதற்கான உணர்வை இதுவே எனக்குத் தருகிறது. ஜோமனா ஹித்தாத் ரூ.70/-