தமிழ் நிலமும் இனமும்?

இலா.வின்சென்ட் இன்று தொல்லியனும் மானிடவியலும் வளர்ச்சியுற்ற நிலையில்,தமிழர்தம் பண்டைய வரலாறு குறித்த புதிய தரவுகள் கிட்டியுள்ளன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழரின் பண்டைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி தொடங்கியுள்ளது.அதன் ஓரங்கமாக திரு.இலா.வின்சென்ட் அவர்களின் இந்நூலும் உருப்பெற்றுள்ளார்.ஒவ்வொரு இயலில் இறுதியிலும் அதன் பொழிவாக செய்திகளைத் தொகுத்தளித்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது.உணர்ச்சி சாராது,தாம் படித்த,தாம் நம்பும் தரவுகளின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியுள்ளார்.அவரது கருத்துக்களுடன் மாறுபாடு கொள்வோரும் இவ்வுண்மையை ஏற்பர் என்றே நம்புகிறேன். நூலைப் படிப்போம்.சிந்திப்போம்.விவாதிப்போம்.ஆ.சிவசுப்பிரமணியன்,தூத்துக்குடி.இலா.வின்செட் அவர்களின் தமிழ் நிலமும் இனமும்,பல நூற்றாண்டு கால நம்பிக்கைகளின் மீது,மறுபார்வை வேண்டுகிறது.எவரையும்,எந்தக் கோட்பாட்டையும் வெல்லும் பூடகம் அவர்க்கு இல்லை.அவர் இங்கே யுத்தக்கருவியோடு நிற்கவில்லை.உடல் தெரியும் கந்தலோடும் முகம் முழுகக் கண்ணீரோடும் உள்ள அபலையைப் போல ஆயிரம் அய்யங்களைக் கையிலேந்தி நிற்கிறார்.இவற்றைப் புறக்கணிப்பது அறிவுடைமை ஆகாது.தமிழ் கூறும் நல்லுலக அறிஞர்களின் கடமை,இந்நூல் எழுப்பும் அய்யங்களுக்கு விடை இறுப்பதே.கவிஞர் தமிழ்நாடன் சேலம் ரூ.100/-

பட்டது யானை

வேல ராமமூர்த்தி பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம்.பெற்றோர் வேலுச்சாமித் தேவர் லக்ஷமி அம்மாள்.கல்லூரிப் படிப்போடு ராணுவத்துக்குப் போனவர்.துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர்.பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர்.மண் சார்ந்த,வல்லமைமிக்க,தனித்த ஓர் எழுத்து பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி,பல்லாயிரம் பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் மேடைக் கதைசொல்லி பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞசியமாகவும் ஆன இவரது கதைகள்,அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம்,ஃபிரெஞ்ச்,மலாய்,கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை,கட்டுடைத்து வெளியேறி,மதயானையாக…கொம்பனாக தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கி உள்ளது. ரூ.300/-

வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ் மக்களின் அறிவுச் சொத்து கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20கதைகளாக36மொழிகள் தெரிந்து150புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. ரூ.350/-

1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

கா அப்பாத்துரையார் தமிழ்ப் பண்பாடு,தமிழர் வாழ்க்கைமுறை குறித்து அலசும் ஓர் ஆவண நூல் ‘1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’.வி.கனகசபை ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை தமிழாக்கம் செய்திருக்கிறார். 1800ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் அரசியல் பிரிவுகள்,அப்போதைய தமிழகத்தின் நிலவியல் பிரிவுகள்,வெளிநாட்டு வணிகம்,மூவேந்தர்களின் சிறப்புகள் போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது.அத்துடன்,தமிழர்களின் பண்டைய சமூக வாழ்வு,சமய வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது.தமிழ்ச் சங்கங்களின் வரலாறும்,திருக்குறள்,சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்கள் குறித்த பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.வேதாந்தம்,ஆசீவகம்,நிகண்டவாதம்,சாங்கியம்,வைசேடிகம்,பூதவாதி,பவுத்தம் ஆகிய அறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகளும் பண்டைய தமிழர் வாழ்க்கையில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் இந்நூல் விளக்குகிறது ரூ.200/-

அதே வினாடி

நாகூர் ரூமி ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன.ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது.அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு.தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும்,கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்றால் அது இந்த நூலில்தான்.ஆமாம்,நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும்.படித்துப் பாருங்கள். ரூ.150/-

மீண்டும் ஆரியரைத் தேடி

த.தங்கவேல் ஆரியர் யார்?எங்கிருந்து வந்தனர்?வந்தனரா?இல்லை சென்றனரா?என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது.இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான்.மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான்.சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன.சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்;குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது;நல்லதுதானே என்கிறீர்களா.அப்படியல்ல அவ்வளவு எளிதாக அதெல்லாம் நடந்துவிடுமா? ரூ.240/-

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை

த.மு.எ.க.ச வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்டுரைத்தொகுப்பாக இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. ரூ.200/-

இலக்கியச் சுவடுகள்

ஆ.மாதவன் ஐம்பதாண்டுகள் ஆங்காங்கே உதிரியாக ஆ.மாதவன் எழுதிய சிந்தனைத் தெறிப்புகளின் செறிவான தொகுதி இது.ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இவற்றை ஒருசேரக் காண்கையில் அடையாளப் படுவது இந்த நூலின் சிறப்பு.தமிழ் இலக்கியச் சூழலில் ஆ.மாதவனின் ஆளுமை தனித்துவமானது.யதார்த்தத்தில் இருந்து புதுமைக்கான பாலத்தை,பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டிய அளவில் அவர் பங்களிப்பு மிக முக்கியமானது.வட்டார வழக்கு எழுத்து வகையில் புறக்கணிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர் ஆ.மாதவன்.கேரளத் தமிழில் அவரது கதைகள்,அதனாலேயே மிளிர்வு கண்டன.கடைத் தெரு சார்ந்த அவரது சாமானியர்களின் அடையாளம் சாமானியமானது அல்ல.மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத்தக்க அளவில் இந்த நூல் காலங் கடந்து நிற்கக் கூடிய,பத்திரப்படுத்தி போற்றிப் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷம். ரூ.300/-

ப்ளுடோனின் புதுமுகம்

த.வி.வெங்கடேஸ்வரன் சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து மிக தொலைவில் வாழும் குடும்ப உறுப்பினர் ப்ளுடோ.இதுவரை எந்ததொரு விண்கலமும் அருகில் சென்று பார்க்காத ஒரே கோள் ப்ளுடோ.சமிபத்தில் ப்ளுடோவின் அருகின் சென்று சேர்ந்த விண்கலமாகிய நியூ ஹெரைசான் குறித்தும், அது கண்டறிந்த ப்ளுடோவின் தன்மைகள் குறித்தும், அவை உருவாகியுள்ள புதிய அறிவியல் கேள்விகள் குறித்தும் விளக்குகின்றார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ரூ.30/-

அதர்படயாத்தல்

சா.கந்தசாமி வாசிப்புக்குப் பெரிதும் உவப்பான முப்பது கட்டுரைகளடங்கிய சா.கந்தசாமியின் இத்தொகுப்பு முழுக்க இலக்கியம் தொடர்பாக வாசகனுடன் இடையறாது உரையாடுபவை.பிரபலமான புத்தகங்கள்,எழுத்தாளர்கள்,இலக்கிய அரங்குகள்,அசைவுகள்,விமர்சனங்கள் என நகரும் இப்பனுவல் சொல்லப்பட்டதிலிருந்து அறியப்படாத தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ரூ.80/-