இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்பப பாரதியின் பங்களிப்பு

கு.சின்னப்பப பாரதி “கு.சின்னப்ப பாரதிக்கு நிகராக தமிழில் எந்த எழுத்தாளரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.ருஷ்ய மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளரும்,நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற சர்வதேச முக்கியத்துவமிக்க படைப்பாளிக்கு நிகரானவர் நமது கு.சி.பா.அவர் ருஷ்ய நாட்டின் கொசாக்கிய விவசாயிகளின் அக உலக ஆழ்மர்மங்களையும் புற உலக வெளிப்பரப்பையும் ஒரு சேர உணர்த்தினார்.இவர் கொங்குநாட்டின் செவல் மண் விவசாயிகளின் உள் மன உலக இயங்குவிசைகளையும்,புறச்சமுதாய வெளியின் மர்மங்களையம் ஒருசேர இணைத்து உணர்த்துகிறார்-மேலாண்மை பொன்னுச்சாமி” ரூ.150/-

மகாகவி பாரதியாரும் சங்க இலக்கியமும்

ய.மணிகண்டன் “1800வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாயப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே,இவ்வளவு உயர்வு கொண்டிருந்த­பெரியோரின் சந்ததியிலே,அவர்கள் நடையிலும் செய்யுளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியிலே நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சியுண்டாக்குகிறது.என்றெல்லாம் எடுத்துரைத்த மகாகவி பாரதி சங்க இலக்கியத்தின் உயிர்நிலையை உணர்ந்து-உணர்த்தியவர்.தனது சமகாலச் சமுகத் தேவையாகிய இந்திய விடுதலைப் போருக்குக் கருவியாக அதனைப் பயன்படுத்தியவர்.அவர்தம் பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டை,பயிற்சியை,எழுத்தாக்கப் பதிவுகளைத் தமிழுலகின் தனித்த கவனத்திற்கு இந்நூல் உரித்தாக்குகின்றது.” ரூ.60/-

வலையில் விழுந்த வார்த்தைகள்

ச. தமிழ்ச் செல்வன் “பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன் வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி.பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக பண்பாட்டுப் போராளியாகப் பரிணாமம் அடைந்ததை தமிழ்ச்செல்வன் நம்மை ஈர்க்கும் இயல்பான மொழியில் கூறிச் செல்வது ரசனைக்குரியது.வாசிப்பவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்காமல் அவரைத் தனது நெடும் பயணத்தடத்தில் கைகோர்த்து அழைத்துச் செல்வதில்,சகபயணியாக உணரவைப்பதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.அவருடைய எழுத்துகளின் வழியே விரியும் உலகத்தை அரை நூற்றாண்டுத் தமிழ்நில வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் நாம் கணக்கில் கொள்ளலாம்.” ரூ.200/-

தமிழ் இலக்கியம் ஒரு புதிய பார்வை

கே.முத்தையா “இந்நூலில் சங்க காலத்தையும் சங்க இலக்கியங்களையும் மட்டுமின்றி கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சைவ- வைணவ இலக்கியங்கள் என ஒரு விரிந்ததளத்தில் தன் அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.” ரூ.350/-

எல்லாமாகிய எழுத்து

சா.கந்தசாமி 45ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி,இலக்கியம் குறித்த தனது அபிப்பிராயங்களையும்,அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.90/-

என் சக பயணிகள்

ச. தமிழ்ச் செல்வன் “வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். “ ரூ.120/-

சந்தித்தேன் (ஆளுமைகளுடனான நேர்காணல்கள்)

ச. தமிழ்ச் செல்வன் ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான்,பங்கு கொள்கிறான்,எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான். ரூ.60/-

கட்டளைக் கலித்துறை

சி.வை.தாமோதரம் பிள்ளை “அரிய இந்நூலை மீண்டும் பதிப்பிப்பது நம்மவர் கடமையாகும்.இக்காலத்தில் நூற்பிரதி கிடைப்பதாயில்லை” என்னும் கலாநிதி க.கைலாசபதியின் விழைவு இந்நூல்வழி ஆய்வும் பதிப்புமாக ஒருசேர நிறைவேறியிருக்கிறது. ரூ.70/-

பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்

ய. மணிகண்டன் பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது; அரிய ஆதாரங்களை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றது. ரூ.140/-