சொல்முகம்

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்–கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். ரூ.170/-

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான். ரூ.120/-

சங்கச்சித்திரங்கள்

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது …எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம் …! – ஜெயமோகன் ரூ.200/-

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.130/-

தப்புத் தாளங்கள்

சாரு நிவேதிதா உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மகத்தான படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிய அறிமுகங்களை இந்நூலின் பல கட்டுரைகள் முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகம் இவற்றின் விழுமியங்களை நாம் அறிந்துகொள்ளத் தடையாக இருப்பது எது என்பது பற்றிய விவாதத்தை இந்த நூல் ஆரம்பித்து வைத்தால் அதுவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கான நியாயத்தை நிறைவு செய்யும்.

வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது. ரூ.170/-