கல்வியில் நாடகம்

பிரளயன் வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது. ரூ.30/-

ஓய்ந்திருக்கலாகாது

அரசி-ஆதிவள்ளியப்பன் இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு. ரூ.70/-

தாகூர்:கல்விச் சிந்தனைகள்

ஞாலன் சுப்பிரமணியம் கல்வியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த குருதேவர் இந்த மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டார்.இந்த மூலக்கூறுகள் சீரான அமைதியுடன்,ஒழுங்குடன் இணைந்து செல்லும்போது மேம்பட்ட சமக உறவுகள் உருவாகும் என அவர் நம்பினார். ரூ.80/-

விவேகானந்தர்:கல்விச் சிந்தனைகள்

பேரா.அ.கருணானந்தம் மாணவர்கள்,இளைஞர்கள் உலகில் கல்வி என்ற குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிய சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் கருத்துகள் கண்ணோட்டங்கள் எப்படி இருந்தன என்பதை விமர்சனப் பார்வையுடன் கூறும் நூல். ரூ.40/-

உலகக் கல்வியாளர்கள்

ஆயிஷா இரா.நடராசன் மாண்டேசாரி,ஜான் ஹோல்ட்,ரெனெய் ஸாஸோ,பாலோ பிரைரே,ஸெலென்கோ,சார்லஸ்,சார்லஸ்,மைக்கெல் எவி,பால்லவ் மற்றும் ஜான் டூவி,,,,உலக அளவில் மாற்றுக் கல்வியை மூன் மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்யும்,ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். ரூ.30/-

காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள்

பேரா.ராஜு “வகுப்பறை நட்பை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு சிறு எட்டும் என்றென்றும் நம்மால் மறக்க முடியாத ஆசிரியை உமா மகேஷ்வரிக்க்குச் செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்.” ரூ.15/-

போயிட்டு வாங்க சார்

ச.மாடசாமி “Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது.நூலின் ஆசிரியர்-ஜேம்ஸ் ஹில்டன்.-இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.” ரூ.35/-

இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?

என்.மணி “ஒவ்வொரு குழந்தையின் கல்வி மறுப்பும்,பல்வேறு விதங்களில்,பல்வேறு கோணங்களில் கல்வி உரிமை சட்டத்தை கேள்வி கேட்க வைத்திருக்கிறது.இந்தக் குழந்தைகளின் கல்வி உரிமையை இந்த அரசியல் பொருளாதார,சமூக மற்றும் பண்பாட்டு உளவியல் சூழலில் இருந்து அணுகித் தீர்க்க வேண்டும். “ ரூ.25/-

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஜேனஸ் கோர்ச்சாக் குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது.இருபத்தியொரு தலைப்புகளின் கீழ்,குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். ரூ.40/-

பள்ளிக் கல்வி

புத்தகம் பேசுது நேர்காணல்கள் புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. ரூ.70/-