Description
ஜெ.பிரபாகர்
பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானவை, நமது சாஸ்திரங்கள். நமது சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை _ தர்மத்தை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைக்க, அந்தந்த சாஸ்திரத்தில் கரைகண்ட விற்பன்னர்கள் அவ்வப்போது நமது நாட்டில் தோன்றியுள்ளனர். அதன் பலனாகத்தான் அந்த சாஸ்திரங்கள் இன்றும் நமது வாழ்க்கையுடன் இணைந்து செல்கின்றன. மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்த தனி நூல் நமது நாட்டில் ஒரு காலகட்டம் வரை இல்லை எனலாம். வேதங்களும் பிற சாஸ்திரங்களும் சொல்லும் ஆலோசனைகளை ஒட்டியே அவை தொடர்ந்து வந்தன. இந்த முறையில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு சாஸ்திரங்களின் உதவியுடன் பரிகாரங்கள் கூறி, சரிசெய்து வந்தனர். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அரசியல் மற்றும் ஆட்சி முறை குறித்து ஒரு நூல் எழுத வேண்டும் என்று சாஸ்திரங்களில் தேர்ந்த ஒருவருக்கே தோன்றியது. தட்சசீலப் பல்கலைக்கழகம் உருவாக்கிய அந்த மாணவன்தான் கௌடில்யன் எனப்படும் சாணக்கியர். அநேகமாக இதுவே உலகின் முதல் நிர்வாக நூலாக இருக்கக் கூடும். அந்த நூல் அர்த்தச
ரூ.40/-
Reviews
There are no reviews yet.