Description
சரஸ்வதி ஸ்ரீனிவாசன்
வீட்டை அழகாய், அலங்காரமாய் வைத்துக்கொள்வது ஒரு கலை. அவசர வேலைகள் நிறைய இருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்தால் நம்மை அரவணைக்கும் தாயைப்போல மனத்துக்கு இதமான, பாதுகாப்பான, நிம்மதி கொடுக்கும் ஆலயமாக வீடு விளங்கவேண்டும். அப்படி இல்லாமல், குப்பை நிறைந்ததாய், பொருட்கள் அலங்கோலமாய் சிதறிக் கிடக்க, திரைச் சீலைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, டி.வி. ஒரு பக்கம் பெரிதாய் அலறிக் கொண்டிருக்க, இந்தக் குப்பைகளின் நடுவே நாமும் வாழ்வது நன்றாக இருக்குமா? வீடு குடிசையாக இருந்தாலும் அடுக்கு மாடி வீடாக இருந்தாலும் பங்களாவாக இருந்தாலும், அது நாம் வாழும் இருப்பிடமாயிற்றே! ஆகவே அதை ஒழுங்காகப் பராமரிப்பது மிக அவசியம். எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் அதை எப்படி அழகுபடுத்துவது? என்பதைத்தான் இன்டீரியர் டெகரேஷன் எனும் கலை நமக்கு விளக்குகிறது. பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வீட்டைப் பார்த்தவுடனே, அதுபோல் தங்கள் வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமாகத் தோன்றும். வீட்டை நன்கு பராமரிப்பவரைப் பார்த்து பொறாமைப்படுவதைக் காட்டிலும், தங்களின் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அக்கறை எடுத்த
ரூ.100/-
Reviews
There are no reviews yet.