அழகே… ஆரோக்கியமே…

85.00

‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே… ஆரோக்கியமே…’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.

Categories: , , Tags: , ,
   
Description

ராஜம் முரளி

ரூ.85/-

Additional information

Weight 0.166 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அழகே… ஆரோக்கியமே…”

Your email address will not be published. Required fields are marked *