Description
ஆர்.ஜி.சந்திரமோகன்
சுயமுன்னேற்ற நூல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. ‘அவர் இப்படி ஜெயித்தார்… இவர் அப்படி ஜெயித்தார்’ என்று அடுத்த நாட்டில் இருக்கிறவர்களையும், அடுத்த மாநிலத்தில் இருப்பவர்களையும் உதாரணமாகக் காட்டி பலரால் எழுதமுடியும். ஆனால், ‘நான் ஜெயித்தது இப்படித்தான்!’ என்று ஒரு சிலரால் மட்டுமே எழுதமுடியும். அத்தகைய சாதனை படைத்த ஆர்.ஜி.சந்திரமோகன் எழுதியிருக்கும் புத்தகம்தான் ‘இனி எல்லாம் ஜெயமே!’ சந்திரமோகனின் எழுத்துக்களில் வெளிப்படுவது புத்தக அறிவு மட்டும் அல்ல… அனுபவங்கள்! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்திருக்கும் இவரது கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வது இவரது சாதனைகள்! புத்தகம் படிப்பவர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘மலையைப் புரட்ட முடியும்… வானத்தை வளைக்க முடியும்ஒ என்றெல்லாம் செய்ய முடியாத விஷயங்கள் எதையும் சந்திரமோகன் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. தான் எதையெல்லாம் சாதித்தாரோ அதை மட்டுமே சொல்லி வாசகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறார். ”தொழிலில் ஜெயிக்க வேண்டுமானால் புத்திசாலித்தனம், துணிச்சல், மனிதர்களை எடைபோடும் திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும
ரூ.65/-
Reviews
There are no reviews yet.