உலக தொழில் நுட்ப முன்னோடிகள்

35.00

“உலகத்தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற நூல் எழுத்தாளர் இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்டு64பக்கங்களைக் கொண்ட12ஆளுமைகளைப் பற்றிய அற்புதமான நூல்.எல்லாப் பக்கங்களிலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் மாணவர் சமூகம் மட்டுமல்ல,விஞ்ஞானத் தொழில்நுட்பப் பயனாளிகள் கூட அறிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.போர்டு என்கிற விஞ்ஞானியின் பெயரில் தார்சாலைகளில் ஓடுகின்ற கார் என்கிற வார்த்தைகள் சாலையைப் பற்றிய,கார் சக்கரமான டயர்பற்றிய,டயரின்தோல் பற்றிய புரிதல்களைப் பல நூற்றாண்டுகளில் எந்த எந்த நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடந்தன என்கிற வரலாற்றை(பக்- 6, 7)இரண்டு பக்கங்களில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.மேல்தட்டு மக்கள் மட்டுமே யோசிக்க முடியும் என்கிற நிலையிலிருந்து விவசாய மக்கள் வாங்கும் வகையில் போர்டு “கார்புரட்சி” நடத்தியுள்ளது சமூக முன்னேற்ற நடவடிக்கையாகும்.போர்டு எவ்வித புகழ்பெற்றாலும் எடிசனுக்கும் தனக்குள்ள உறவும் அற்புதமானது என்று போர்டு சொல்வது தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “சொல் உள்ளவர்கள் செல் உள்ளவர்களே” என்கிற வகையில் அதிநவீன புரட்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொபைல் புரட்சியில் ஓர் அங்கமான மோட்டோ ரலா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் வீழ்ச்சி பற்றிய பொருளாதாரச் சிந்தனைகளை மாரட்டின் கூப்பர் என்கிற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.அதிக எடை கொண்ட மொபைல்,ஒரு குறுகிய கால இடைவெளியில் எடை குறைவாய்க்கொண்டு வரப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கூப்பர்தான் சூப்பர்மேன் என்பதை மொபைல் உபயோகிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஐப்பான் போரில் இருந்து மீண்டெழுந்த வரலாற்றின் நாயகன் ஆக்கியே மோரிடா என்பவரின் விபரமும் அவரது தளராத நடவடிக்கைகளும் நட்புக்கு அவர் தந்த மரியாதையும் போற்றப்பட வேண்டியவை. “பிஷீtவிணீவீறீ” என்கிற வசதியைப்பற்றிய வரலாறும்,ஸபீர் பாட்டியா என்பவரது விஞ்ஞான திலகத்திற்கு சிலை வைக்க வேண்டாம் காந்திக்குத்தான் சிலை வைக்க வேண்டும் என்று ஸபீர் கூறியிருப்பது அவரது அடக்கத்தை உணர்த்துகிறது.விஞ்ஞானி மார்கோனிதான் ரேடியோ என்பதைக் கண்டுபிடித்தார் என்கிற விவரத்தை(ஆனால் பொய்)உண்மைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு உணர்த்தியுள்ள ஆசிரியர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். 1895இல்(ஜெகதீசசந்திர போஸ்)கண்டுபிடித்த பிறகு1896இல் மார்கோனிக்கு உரிமை வழங்கியதை உணர்த்துகிறர் ஆசிரியர்.இந்தச் செய்திகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.இந்தியர் களுக்குச் சமமான சம்பளம் வேண்டி ராயல் சொசைட்டியில் போராடியவர் போஸ்.மேலும் தாவரத்திற்கு உயிர் உள்ளது என்கிற உண்மையை கண்டறிந்தவர்.கருத்துக்கணிப்பு-வியாபார நோக்கம்-முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடித்த ஜார்ஜ்கேலப் பற்றிய வரலாறு,நீரின் முக்கியத்து வத்தை உணர்த்திய விஸ்வேஸ்வரய்யா,குவார்ட்ஸ் கடிகாரம் தோன்றிய வரலாறு,தொழிற் புரட்சியின் ஸ்தாபகரான பிர்லாவின் தேசப்பற்று,விஞ்ஞானிகளுக்குக் கோயில் வாசலில் முக்கியத்துவம் தந்த அவரது பணி பற்றிய விவரங்களை,பறவைகளின் பாதுகாப்பு பற்றிய அலீம் அலி சொல்லி உள்ள பகுதிகளும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் புதியவை.அமர்த்தியா சென் என்கிற சமூக விஞ்ஞானி பற்றிய விவரங்கள் அனைத்தும் புதிய,புதுமைச் செய்திகளே-புத்தகத்தின்64பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து,நமது பகுதியைச் சார்ந்தவர்களுக்குப் பரிசளிக்கும் தன்மை கொண்ட நூல் இது.இதனை நேர்த்தியாக வெளியிட்ட பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியதாகும். “

Categories: , , Tags: , ,
   

Description

ஆயிஷா இரா.நடராசன்

““உலகத்தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற நூல் எழுத்தாளர் இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்டு64பக்கங்களைக் கொண்ட12ஆளுமைகளைப் பற்றிய அற்புதமான நூல்.எல்லாப் பக்கங்களிலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் மாணவர் சமூகம் மட்டுமல்ல,விஞ்ஞானத் தொழில்நுட்பப் பயனாளிகள் கூட அறிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.போர்டு என்கிற விஞ்ஞானியின் பெயரில் தார்சாலைகளில் ஓடுகின்ற கார் என்கிற வார்த்தைகள் சாலையைப் பற்றிய,கார் சக்கரமான டயர்பற்றிய,டயரின்தோல் பற்றிய புரிதல்களைப் பல நூற்றாண்டுகளில் எந்த எந்த நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடந்தன என்கிற வரலாற்றை(பக்- 6, 7)இரண்டு பக்கங்களில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.மேல்தட்டு மக்கள் மட்டுமே யோசிக்க முடியும் என்கிற நிலையிலிருந்து விவசாய மக்கள் வாங்கும் வகையில் போர்டு “கார்புரட்சி” நடத்தியுள்ளது சமூக முன்னேற்ற நடவடிக்கையாகும்.போர்டு எவ்வித புகழ்பெற்றாலும் எடிசனுக்கும் தனக்குள்ள உறவும் அற்புதமானது என்று போர்டு சொல்வது தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “சொல் உள்ளவர்கள் செல் உள்ளவர்களே” என்கிற வகையில் அதிநவீன புரட்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொபைல் புரட்சியில் ஓர் அங்கமான மோட்டோ ரலா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் வீழ்ச்சி பற்றிய பொருளாதாரச் சிந்தனைகளை மாரட்டின் கூப்பர் என்கிற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.அதிக எடை கொண்ட மொபைல்,ஒரு குறுகிய கால இடைவெளியில் எடை குறைவாய்க்கொண்டு வரப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கூப்பர்தான் சூப்பர்மேன் என்பதை மொபைல் உபயோகிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஐப்பான் போரில் இருந்து மீண்டெழுந்த வரலாற்றின் நாயகன் ஆக்கியே மோரிடா என்பவரின் விபரமும் அவரது தளராத நடவடிக்கைகளும் நட்புக்கு அவர் தந்த மரியாதையும் போற்றப்பட வேண்டியவை. “பிஷீtவிணீவீறீ” என்கிற வசதியைப்பற்றிய வரலாறும்,ஸபீர் பாட்டியா என்பவரது விஞ்ஞான திலகத்திற்கு சிலை வைக்க வேண்டாம் காந்திக்குத்தான் சிலை வைக்க வேண்டும் என்று ஸபீர் கூறியிருப்பது அவரது அடக்கத்தை உணர்த்துகிறது.விஞ்ஞானி மார்கோனிதான் ரேடியோ என்பதைக் கண்டுபிடித்தார் என்கிற விவரத்தை(ஆனால் பொய்)உண்மைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு உணர்த்தியுள்ள ஆசிரியர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். 1895இல்(ஜெகதீசசந்திர போஸ்)கண்டுபிடித்த பிறகு1896இல் மார்கோனிக்கு உரிமை வழங்கியதை உணர்த்துகிறர் ஆசிரியர்.இந்தச் செய்திகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.இந்தியர் களுக்குச் சமமான சம்பளம் வேண்டி ராயல் சொசைட்டியில் போராடியவர் போஸ்.மேலும் தாவரத்திற்கு உயிர் உள்ளது என்கிற உண்மையை கண்டறிந்தவர்.கருத்துக்கணிப்பு-வியாபார நோக்கம்-முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடித்த ஜார்ஜ்கேலப் பற்றிய வரலாறு,நீரின் முக்கியத்து வத்தை உணர்த்திய விஸ்வேஸ்வரய்யா,குவார்ட்ஸ் கடிகாரம் தோன்றிய வரலாறு,தொழிற் புரட்சியின் ஸ்தாபகரான பிர்லாவின் தேசப்பற்று,விஞ்ஞானிகளுக்குக் கோயில் வாசலில் முக்கியத்துவம் தந்த அவரது பணி பற்றிய விவரங்களை,பறவைகளின் பாதுகாப்பு பற்றிய அலீம் அலி சொல்லி உள்ள பகுதிகளும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் புதியவை.அமர்த்தியா சென் என்கிற சமூக விஞ்ஞானி பற்றிய விவரங்கள் அனைத்தும் புதிய,புதுமைச் செய்திகளே-புத்தகத்தின்64பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து,நமது பகுதியைச் சார்ந்தவர்களுக்குப் பரிசளிக்கும் தன்மை கொண்ட நூல் இது.இதனை நேர்த்தியாக வெளியிட்ட பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியதாகும். ”

ரூ.35/-

Additional information

Weight 0.170 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலக தொழில் நுட்ப முன்னோடிகள்”

Your email address will not be published. Required fields are marked *