Description
ஆர்.முத்துக்குமார்
இந்தியாவின் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போதும் நாடெங்கும் ஒரே மகிழ்ச்சி, கொண்டாட்டம், குதூகலம் பொங்கி வழியும். ஆனால், காஷ்மீர் மட்டும் நடுநடுங்கிக் கொண்டிருக்கும். எப்போது குண்டு வெடிக்குமோ, யார் வந்து நம்மைச் சுடப் போகிறார்களோ என்று தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள் காஷ்மீர் மக்கள்! இந்த பயத்துக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் பாகிஸ்தான்தான்! இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, பாகிஸ்தான் என்ற இன்னொரு தேசமும் உருவாகிவிட்டது. காஷ்மீரின் எல்லையிலிருந்து தொடங்கும் அந்த தேசம், ‘இந்தியாவின் தலையிலிருக்கும் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது _ இன்றுவரை. காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா..? பாகிஸ்தானுக்குச் சொந்தமா..? தீர்க்கமாகச் சொல்கிறார்கள் காஷ்மீர் மக்கள்: ‘நாங்கள் அனைவரும் இந்தியர்கள்… இந்தியா எங்கள் தாய்நாடு’. பிறகு ஏன் அடிக்கடி இந்தியாவை வம்புக்கு அழைக்கிறது பாகிஸ்தான்? அதற்குக் காரணம் பாகிஸ்தானின் அரசியல் _ ராணுவம் _ ராணுவ அரசியல்! ஆர். முத்துக்குமாரின், சுவாரஸ்யமான இந்தக் கட்டுரைகள், ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது,
ரூ.65/-
Reviews
There are no reviews yet.