Description
வெ.இறையன்பு
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறது இந்த நூல். மாணவப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை மகிழ்ச்சியாக வாழ, வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை ‘சக்தி விகடனி’ல் வெ.இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ‘ஆனந்தமாக வாழ நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறைதான் ஆன்மிகம்’ என்பதை மனம் லயிக்கும் விதத்தில், கருத்தாழம் கொண்ட கதைகளோடு எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பணம், பொருள், புகழ் _ இந்த மூன்றும் கொடுக்காத மகிழ்ச்சியை குடும்பச் சொந்தங்கள் கொடுக்கும். கடன் வாங்கி கட்டப்பட்ட வீடு தராத மகிழ்ச்சியை நல்ல நட்பு தரும். ஓடி ஓடி உழைத்தும் கிடைக்காத சந்தோஷம் கணவனும் மனைவியும் சேர்ந்து வளர்க்கும் குழந்தையால் கிடைக்கும். இப்படி, அன்றாட வாழ்வில் மனதுக்கு நிரந்தர மகிழ்வைத் தரும் அனுபவங்களை இந்த நூலில் அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார் வெ.இறையன்பு. மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும், சூழ்நிலைக்கான அறிவுத்திறனும், சடுதியில் முடிக்கும் ஆளுமையும் இருந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். _ இப்படி, மகிழ்ச்சியைப் பெருக்கும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த நூல், உங்கள் சிந்தனைகளைச் சிறக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றும்.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.