எமது மொழிபெயர் உலகினுள்

250.00

இந்த நூல் எமது பதிப்பு முயற்சியில் ஒரு மைல்கல். உலகில் உள்ள அற்புதமான தமிழ்க் கவிதைகளை ஒரு சோற்றுப் பதமாக ஒன்றுதிரட்டி அதைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிடும் உன்னத தருணம். ‘எமது மொழிபெயர் உலகினுள்’ நூலை கனடா இலக்கியத் தோட்டம் முதலில் வெளியிட்டது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, கனடா, அமெரிக்கா… பூமிப் பந்தில் தமிழ் கவிதை முகிழ்க்காத பகுதி எதுவும் இல்லை என்பது ஒரு பெருமைதான். ஆங்கில வரிசைக் கிரமப்படி அகிலன் தொடங்கி யூமா வாசுகி வரை இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறார்கள். செல்வா கனகநாயகத்தின் இந்தத் தொகுப்பு நூல் ஓர் அசாதாரணப் பணி. உலகம் எங்கும் உள்ள 78 தமிழ்க் கவிஞர்களின் ஒப்பற்றக் கவிதைகளின் சங்கமம் இது. இந்த நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்ற நம் ஆவலைத் தெரிவித்ததும் அதற்குப் பெரு மகிழ்ச்சியுடன் ஆவன செய்தவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். அவருடைய ஆதரவு இன்றி இத்தனை சீக்கிரத்தில் இந்த நூல் உங்கள் கரங்களுக்குக் கிடைத்திருக்காது. இந்த நூல் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் அவர் மூலமாகத்தான் நாம் நன்றி சொல்கிறோம். ஏக்கத்தையும், பிரிவின் துயரையும், இயற்கை அதிசயத்தையும் தத்துவ சாரத்தையும் ஒருங்கே படிக்கக் கிடைக்கும் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.

Description

தமிழ் இலக்கியத் தோட்டம்

ரூ.250/-

Additional information

Weight 0.411 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “எமது மொழிபெயர் உலகினுள்”

Your email address will not be published. Required fields are marked *