Description
எழில்வரதன்
காலந்தோறும் சிறுகதையின் செய்முறை மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மகிழ்ச்சி கொள்ளத்தக்க மாறுதல். தி.ஜானகிராமன் எழுத்து நடை ஒரு மாதிரி இருந்தது. ஜெயகாந்தன் வேறு மாதிரியாக. இப்படி வெவ்வேறு ரகத்தில் சிறுகதை நெய்யப்பட்டது. இப்போது, காற்றுப்போக்கில் போகும் காகிதம் மாதிரியான ஒரு புது நடையையே தனது இலக்கணமாகக் கொண்டு கதைகள் கொண்டுவந்திருக்கிறார் எழில்வரதன். தன் முதல் தொகுப்பான ‘ரதிப் பெண்கள் உலவும் அங்காடித் தெரு’ மூலமே வாசகர்களுக்குப் பரிச்சயப்பட்ட எழில்வரதனை இன்னும் பரவலாக அறிமுகப்படுத்துவதாக இந்தப் புத்தகம் இருக்கும். இவர் காட்டும் உலகம் பெரும்பாலும் துன்ப இயலாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது. இதில் வரும் அநேக மனிதர்கள் மனதிற்குள்ளே திட்டம் போட்டு அதை மனதுக்குள் மட்டுமே நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள். கனவுகளோடு கல்யாணம் செய்து கொண்டு வந்தவள், கணவன் மனநோயாளி என்று தெரிகிறபோது என்ன செய்கிறாள் என்று ஆராய முற்படுகிறது இன்னொன்று. தேவையில்லாமல் ஒருவனின் கெட்ட வார்த்தை வசவுக்கு ஆளான ஒருவன், அந்த வசவால் எப்படி எல்லாம் உளைச்சலுக்கு ஆளாகிறான் என்று சொல்கிறது ஒரு கதை. தன் முறைப்பையனை கவ
ரூ.75/-
Reviews
There are no reviews yet.