Description
கொத்தமங்கலம் சுப்பு
இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டபொம்மன் மட்டும் போரிடவில்லை. தன்னோடு பல வீரர்களையும் இணைத்துக் கொண்டான். அதில் குறிப்பிடத்தக்கவன் அவன் தம்பி ஊமைத்துரை. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவன் விட்டுப் போன போராட்டத்தை தோளில் சுமந்தவன். வெள்ளையர், பீரங்கி குண்டுகளால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை துளைத்தெடுத்தபோது, நான்கே நாட்களில் மீண்டும் ஒரு கோட்டையை அதே இடத்தில் கட்டியவன். வெறும் மண்ணோடு சில மூலிகைகளையும் கலந்து கட்டப்பட்ட ஒரு ‘இரும்புக் கோட்டை’ அது. அப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை பெயர் தெரியாத
ரூ.65/-
Reviews
There are no reviews yet.