Description
மு. கோபி சரபோஜி
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப் போராடியவர்களில் ஒருவர் & கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்கு உரியவராகத் திகழும் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வசதியான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படித்து, வழக்கறிஞர் பட்டமும் வாங்கி, தொழிலிலும் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனாரை, ராமகிருஷ்ண மடத்து துறவிகளின் சந்திப்பு ஆன்மிகத் தேடலைக் கடந்து அரசியலில் திசைதிருப்பியது. அரசியல் குருவான திலகரின் கொள்கைகளைப் பின்பற்றியது; ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், வாணிப ரீதியாகவும் வீழ்த்திட ‘சுதேசி நாவிகேஷன் கம்பெனி’ என்ற கப்பல் கம்பெனியைத் துவக்கியது; மேடைப் பேச்சுகளால் தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் விடுதலை வேட்கையைத் தூண்டியது… என வ.உ.சி&யின் தேச நலனுக்கான செயல்பாடுகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் இந்த நூலில் கோபி சரபோஜி தெளிவாக எழுதியுள்ளார். எந்த மக்களின் விடுதலைக்காக கடுங்காவல் தண்டணை அடைந்து, சிறையில் செக்கிழுத்துக் கொடுமைகளை அனுப
ரூ.60/-
Reviews
There are no reviews yet.