Description
கல்கி
தமிழக வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எவரும் மறக்காத பெயர் கல்கி. வரலாற்று நவீனங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி போன்றவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களின் மனதை இன்றளவும் மயக்கி வைத்திருக்கும் எழுத்துக்காரர் கல்கி. தான் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்த அனைத்து நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் இவர். தமிழிசையை வளர்த்தெடுத்தவர்களில் முன்னோடியான கல்கி, தமிழிசை குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரசித்தி பெற்றவை. அதில் நயமான வரிகளின் மூலம், ஹாஸ்யத் தெறிப்போடு தமிழை லாகவமாகக் கையாண்டிருப்பார். தேசிய இயக்கத்துக்கும், நவீன நாகரிகத்துக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்குண்ட தமிழரின் வாழ்வை, கருப்பொருளாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையும், இலக்கிய நயமும் கோலோச்சும் கல்கியின் எழுத்துவீச்சுதான் கல்கி வளர்த்த தமிழ். இதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பரிமாறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் எழுச்சிப் பெற்ற தேசிய தாகமும், நவீன நாகரிகத்தில் வீழ்ந்த நம் முன்னோர்களின் அடிமை மோகமும் சரிவிகிதமாகப் பதிவு
ரூ.160/-
Reviews
There are no reviews yet.