Description
பாரதி தம்பி
மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருப்பிடம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அது ஈசலாக இருந்தாலும், மரங்கொத்திப் பறவையாக இருந்தாலும், நரியாக இருந்தாலும் சரி… எல்லாவற்றுக்கும் கூடோ குகையோ அவசியம்… ‘எலி வளையாக இருந்தாலும் தனி வளையாக இருக்கணும்’ என்பார்கள். ‘மனிதனாகப் பிறந்தவன் ஒரு வீட்டையாவது கட்டி விட்டுச் செல்ல வேண்டும்’ என்பார்கள். எத்தனையோ வீடுகள் மூன்று, நான்கு தலைமுறைகள் தாண்டியும் கோயில் போல் வாழ்கின்றன. ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்நாளில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருக்கும். அப்படி நீங்கள் வீடு கட்டுவதற்காக அல்லது கட்டப்பட்டு இருக்கும் வீட்டை வாங்குவதற்காகத் தேவைப்படும் தொகையை வங்கியில் கடன் பெறுவது எப்படி… அதற்கான வட்டி விகிதம் முதற்கொண்டு, அதில் வருமான வரிச் சலுகை பெறுவது எப்படி..? என்பது வரையில் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் பாரதி தம்பி. அதோடு, வீடு கட்டுவதற்குத் தேவையான செங்கல், மணல், சிமென்ட், டைல்ஸ்… என எல்லாவற்றிலும் எப்படி சிக்கனமாக, தரமானதாக வாங்க வேண்டும் என்பதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வெ
ரூ.65/-
Reviews
There are no reviews yet.