Description
கு.அழகிரிசாமி
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 – ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்தவர். ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ மாத இதழில் பிரசுரமானது. ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். கு.அழகிரிசாமி தம் கதைகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களைப் படைத்திருந்தாலும், குழந்தைகளைப் பல கதைகளில் கதாப்பாத்திரங்களாக படைத்துள்ளார். அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று, குமாரபுரம் ஸ்டேசன், தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி போன்ற கதைகளில் குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற வெள்ளை மனதை வெளிப்படுத்தியவர். தம்பி ராமையா கதையை படிப்பவர்கள் கதையின் முடிவில் தம்பி ராமையாவுடன் பயணிப்பது போன்ற உணர்வை பெறுவார்கள். கு.அழகிரிசாமி தம் கதைகளில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், சிரிப்பு, அழுகை, பயம் போன்ற உணர்வுகளைக் கதைகளாக உருவாக்கியவர். இளையதலைமுறை அவசியம் வாசிக்கப்பட வேண்டியவர் கு.அழகிரிசாமி. இலக்கிய சிகரங்கள் வரிசையில் கு.அழகிரிசாமி கதைகளில் முக்கியமான சிலவற்றைத் தொகுத்து வெளியிடுவதில் எமது விகடன் பிரசுரம் பெருமை அடைகிறது. வாருங்கள் இலக்கியமாய் வாழ்ந்த அந்த தெற்கத்தி ஆன்மாவை வாசிப்போம்.
ரூ.130/-
Reviews
There are no reviews yet.