Description
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் அவலங்களை உற்று நோக்கி அதைக் கதைப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளையை வளர்த்த பிறகு முதுமைக் காலத்தில் மீண்டும் ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தொடரும் பேச்சியம்மை கதை மனதைப் பிசைகிறது. இது கதையல்ல, வாழ்க்கையின் யதார்த்தம். இப்படிப்பட்ட தாய்மார்களை அடுத்தத் தெருவில், நாம் வாழும் ஊரில் பார்க்கத்தானே செய்கிறோம். நூல் ஆசிரியர் அலுவல் நிமித்தமாக வட நாட்டில் வாழ்ந்தவராதலால், மும்பை, தாணே, கோவா போன்ற ஊர்களையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் வைத்துக் கதையைப் பின்னியிருப்பதும், இந்தி, மராத்தி மொழிகளையும் தன் கதைகளில் கையாண்டிருப்பதும், அதன் மாந்தர்களை பாத்திரங்களாகப் படைத்திருப்பதும் சுவையை கூட்டுகிறது. ஆனால், தமிழகமானாலும் வட மாநிலமானாலும் உணர்வுகள் ஒன்றே என்ற இழை கதைகளில் சன்னமாக பின்னப்பட்டிருப்பது கதைகளின் வலிமை. கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.
ரூ.70/-
Reviews
There are no reviews yet.