Description
எஸ். ராமகிருஷ்ணன்
கலைகள் என்பது எப்போதும் உன்னதங்களின் மீது கட்டப்படும் மகத்தான அனுபவங்கள் அல்ல.கலைகள் தரும் மன எழுச்சிக்குப்பின்னே அதைப் படைப்பவர்களின் இருண்ட நிழல்கள் அசைந்துகொண்டிருக்கின்றன.இந்த நாவல் வறுமைக்கும் அவமானங்களுக்கும் வீழ்ச்சிக்கும் நடுவே கலையின் மாபெரும் வெளிச்சத்தை ஏந்தி நடந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.கரிசல் பூமியின் சங்கீதம் என்பது ஓசைகளால் ஆனதல்ல,அது வாசனைகளால் நிரம்பியது என்பதுதான் இந்த நாவலின் மையப் படிமம்,அது ஆற்ற முடியாத மனித துயரத்தின் வாசனை.மனித மனதின் பிரகாசமான தருணங்களின் வாசனை.எந்த ஒரு அகங்காரத்தையும் அதிகாரத்தையும் மனம் உடையச் செய்து கரையவைக்கும வாசனை.அந்த வாசனையின் வழியே இந்த நாவல் தமிழ்வாழ்க்கையின் இதுவரை சொல்லப்படாத கதைகளைச் சொல்கிறது.சாதிய சமூகத்தின் வெறுப்புக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே தமிழ்ச் சமூகத்தின் கலைகளின் மீது படிந்த புழுதிகளையும் வெளிச்சங்களையும் இந்த நாவலில் எழுதிச்செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் எந்த ஒரு அவலமும் மனிதனின் கலை சார்ந்த கனவுகளை அழித்துவிடமுடியாது என்பதை ஒரு பிரமாண்டமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறார்.
ரூ.370/-
Reviews
There are no reviews yet.