Description
அமுதவன்
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் பதற்றத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு வேண்டும்; இனிப்பு கூடவே கூடாது; தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்… இப்படி சர்க்கரை நோய் பற்றி பரவலாக பல கருத்துகள் உலா வருகின்றன. சர்க்கரை நோய் என்பது என்ன? அது எதனால் வருகிறது? வந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? சர்க்கரை நோயை எந்தெந்த மருத்துவ முறைகளால் கட்டுப்படுத்தலாம்? என்ன மாதிரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளலாம்? போன்ற கேள்விகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் விடை சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் அமுதவன். இந்த நூல், நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரெய்கி, பிராணிக்&ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளை
ரூ.95/-
Reviews
There are no reviews yet.